தனது படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட மீரா மிதுன் – இத பாக்குறப்ப அந்த GVM படம் ஞாபகம் வருதா ?

0
2851
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த மாதங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இதையும் பாருங்க : தட்ல வெத்தல பாக்கு 500ரூ பணம் வச்சி கும்புடற வழக்கம் இருக்கு, ஆனால் – தலித்களை காலில் விழ வைத்த சம்பவத்தின் மறுபக்கத்தை சொன்ன ஊர் மக்கள்.

- Advertisement -

அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கூறி அழுதார் மீரா. அதே போல விஜய் மற்றும் சூர்யாவை தான் தவறாக பேசி விட்டேன் என்றும் இது அனைத்துக்கும் திருநங்கை அப்சரா தான் காரணம் என்றும் கூறி இருந்தார் மீரா மிதுன். அதே போல மீரா மிதுன், dreamy night என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறி இருந்தார்.

அதே போல தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து வருவதாக கூறிய மீரா மிதுன் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது படத்தின் அடுத்த பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் கேட்கவும் முடியவில்லை பார்க்கவும் முடியவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும். இந்த பாடலின் ஆரம்பத்தில் ‘வின்னைத்தாண்டி வருவாயா’ படத்தில் வரும் சிம்பு – திரிஷா ரேஞ்சுக்கு இவர்களின் அட்ராசிட்டி இருப்பது தான் பொறுக்க முடியவில்லை.

-விளம்பரம்-
Advertisement