தட்ல வெத்தல பாக்கு 500ரூ பணம் வச்சி கும்புடற வழக்கம் இருக்கு, ஆனால் – தலித்களை காலில் விழ வைத்த சம்பவத்தின் மறுபக்கத்தை சொன்ன ஊர் மக்கள்.

0
1870
mohan
- Advertisement -

விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து முன் தலித் பெறுவர்களை காலில் விழ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் என்ற கிராமம் .கடந்த 12ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தி இருக்கிறார்கள்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறு சில சாதியினர் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி கோவில் திருவிழா நடைபெறுவதாக போலீசுக்கு புகார் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அங்கு வந்த போலீசார் திருவிழாவை நிறுத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மறுநாள் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் போலீசாருக்கு புகார் அளித்த வேறு சாதி நபரை சேர்ந்தவரிடம் திருவிழாவிற்கு செய்த செலவு எல்லாம் வீணாகிவிட்டது ஏன் இப்படி போலீசாரிடம் புகார்அளித்தீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்கள். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தவர் கிராம பஞ்சாயத்திடம் இந்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். பின்னர் கிராமத்தினர் சேர்ந்து பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் குடும்பத்திலும் கொரோனா – அதுவும் யாருக்கு பாருங்க பாவம்.

- Advertisement -

இந்த பஞ்சாயத்தின் போது தாங்கள் செய்தது தவறுதான் என்று காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த மற்ற சாதியினர் வாயால் சொன்னால் போதாது என்று காலனி பகுதியில் இருந்த தலித் இனத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களை அசுரன் படத்தில் வருவது போல பஞ்சாயத்தின் காலில் விழவைத்து இருக்கிறார்கள் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

இதனால் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த சமத்துவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தலித் பெரியவர்களை காலில் விழ வதைத்தாக கூறப்பட்ட வேறு சாதியினர் பேசியுள்ளார்கள்.

-விளம்பரம்-

அதில் கொரோனா தொற்று இருக்கும் போது சிலர் திருவிழா நடத்தியதால் தான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது என்றும். எங்கள் ஊரில் தவறு செய்பவர்கள் வெத்தல பாக்கில் 500 ரூபாய் காசு வைத்து காலில் விழும் சம்ப்ரதாயம் இருக்கிறது என்றும், ஆனால், நாங்கள் யாரும் அதை செய்ய சொல்லவில்லை, அவர்களாகவே இந்த மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காலில் விழுந்து அவர்களே அதை வீடியோ எடுத்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மோகன், நாணயம் இரு பக்கம் கொண்டது.. ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அது செல்லாத காசு.. உண்மை வெளி வந்தே தீரும்.. விழுப்புரம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவத்தின் இந்த பக்க விளக்கம் இது..என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement