சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்தனர்.
தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அதே போல மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : இங்க வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு – வெளியான பிக் பாஸ் 5வின் அடுத்த ப்ரோமோ.
இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், விடுதி மேலாளரை தாக்க முற்பட்டது உள்ளிட்ட 2 வழக்குகளிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசுப்ரமணியம் முன் ஆஜர்படுத்தினர். அப்போது காவல்துறையினர் தன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு வழக்குகள் குறித்து முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் அவர் முறையிட்டார். இதையடுத்து எழும்பூர் போலீசார் பதிவு செய்த 2 வழக்குகளிலும் 1000 ரூபாய் பிணையுடன் மீரா மிதுனுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். மேலும், பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.