பிரேக்கிங் நியூஸ் : விரைவில் மீரா மிதுன் கைது. காரணம் இந்த வீடியோ தான்.

0
1394
meeramithun
- Advertisement -

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக மீராமிதுன் தான் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன் கடந்த சில காலமாகவே தமிழில் உள்ள பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது ஏதாவது சரியான விஷயம் குறித்தும் ட்வீட் செய்து அதன் மூலம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் ட்விட்டரில் #SaveTemplesFromBrahmanism என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த சில நாட்களாகவே ட்விட்டரில் எந்த ஹேஸ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தாலும் அதனை குறிப்பிட்டு மீரா மிதுன் ட்வீட் போட்டு விடுவார். நேற்று கூட அஜித் ரசிகர்கள் 250DaysToTHALA50 என்ற ஹேஷ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அந்த டேக்கை பயன்படுத்தியும் ட்வீட் போட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் #SaveTemplesFromBrahmanism என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்துள்ள மீரா மிதுன், இது ஒரு முன்னுரிமையின் பேரில் செய்யப்பட வேண்டும். கோயில்களில் மட்டும் இல்லை கோலிவுட் கூட பிராமணியத்தின் பிடியில் உள்ளது. பிற ஆதிக்க சமூகம் இந்த பிராமணிய கருத்தியலால் வழிநடத்தப்படுகிறது. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை பேசியுள்ளேன். இதற்கு விரைவில் மு க ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

வழக்கம் போல மீரா மிதுனின் இந்த டீவீட்டையும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், மீரா மிதுனின் பழைய ட்வீட் ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் கடந்த சில வருடங்களாக என்னை பல்வேறு வழிகளில் டார்ச்சர் செய்து வருகிறார் ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை ஏன் மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நான் முதலமைச்சராக வந்தாள் தமிழர்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் தாங்க அனுமதிப்பேன். மலையாளி, தெலுங்கு மற்றும் மற்றவர்களை வெளியில் அனுப்பி விடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன் மீது கேரளாவில் FIR பதிவு செய்யபட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் பதிவிட்ட வீடியோ ஒன்றில் கேரள மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது FIR பதிவு செய்யபட்டுள்ளது. இதனால் மீரா மிதுன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement