தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்த பொண்ணு 40 நாள் ஜெயில்ல இருக்கணுமா ? ஜாமினில் வெளியில் வந்து மீரா கொடுத்த முதல் பேட்டி.

0
921
meera
- Advertisement -

சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். மீரா மிதுன் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். பின் மீராமிதுன் அவர்கள் யூடியூப் வீடியோ மூலம் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதற்கு மீரா மிதுன் மிது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

-விளம்பரம்-

இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், சமீபத்தில் தான் மீராமி துன் சிறையிலிருந்து வெளிவந்தார். இப்படி ஒரு நிலையில் சிறையில் இருந்து வந்த பின்னர் முதன் முறையாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : இது கனவா நெனவா – மேடையில் கட்டித் தழுவிக்கொண்ட ஓவியா மற்றும் ஜூலி. வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

அதில், நான் தவறு செய்திருந்தால் என்னை எச்சரித்து இருக்கலாம். நான் சமூகத்திற்கு பல உதவிகளை செய்து இருக்கிறேன். அதற்கெல்லாம் மேலாக நான் ஒரு தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு பிரபலம். தமிழ்நாட்டிற்கு விருதை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவர் 40 நாட்கள் சிறையில் இருக்க வேண்டுமா இதைப் பற்றி மக்கள் ஏன் யோசிக்கவில்லை. என்னை பழி வாங்கவே இப்படி செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் நான் உயர் நீதிமன்றத்திற்கு சென்று இருப்பேன் என்னிடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெரியும். என்னுடைய அனைத்து பிரச்சனைகள் குறித்தும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறேன். இதற்கு மேல் என்னால் இதை சமாளிக்க முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இருப்பினும் நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று ஒரு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement