இது கனவா நெனவா – மேடையில் கட்டித் தழுவிக்கொண்ட ஓவியா மற்றும் ஜூலி. வைரலாகும் புகைப்படங்கள்.

0
244
oviya
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

இதையும் பாருங்க : கமலின் ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த இருவர் தானாம் – யார் பாருங்க.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை இவருக்கும் ஓவியாவிற்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. மற்ற போட்டியாளர்கள் ஜூலியை வெறுத்த போது ஓவியாதான் ஆதரவாக பேசினார். ஆனால், அந்த நன்றியை மறந்து ஓவியா குறித்து ஜூலி தவறாக பேசினார் இதற்காக குறும்படம் எல்லாம் கூட போடப்பட்டது. அதன்பின்னர் ஜூலியை ரசிகர்கள் அதிகம் கலாய்த்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஓவியா மற்றும் ஜூலி இருவருமே நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மேடையில் இருவரும் கட்டித் தழுவி தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இதை நம்புவதா இல்லையா என்ற அளவிற்கு வியப்படைந்து இருக்கிறார்கள்

-விளம்பரம்-
Advertisement