மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் போட்ட வழக்கு, 3 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. மீண்டும் சிக்கலில் சூப்பர் மாடல்.

0
856
meera
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் தொடரப்பட்ட வழக்கில் மீரா மிதுன் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார். ரா மிதுன் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார்.

-விளம்பரம்-
joe

பின் மீராமிதுன் அவர்கள் யூடியூப் வீடியோ மூலம் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதற்கு மீரா மிதுன் மிது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எதுக்கு இந்தியாவிலேயே முதல் முறை, உலகத்தில் முதன் முறை எல்லாம் – இரவின் நிழல் படத்தை நொட்டம் சொன்ன ப்ளூ சட்டை மாறன்.

மீரா மிதுனின் அடுத்த தலைவலி :

மேலும், சமீபத்தில் தான் மீராமி துன் சிறையிலிருந்து வெளிவந்தார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனுக்கு ஜோ மைக்கேலால் அடுத்த தலைவலி ஆரம்பித்து இருக்கிறது.மீரா மிதுன் பற்றிய உண்மை முகம் பலருக்கும் தெரிய வர முக்கிய காரணமாக இருந்தது ஜோ மைக்கேல் தான். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே மீரா மிதுன் குறித்த பல்வேறு உண்மைகளை சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-

மீரா மிதுனின் உண்மை முகத்தை காட்டிய ஜோ :

அதேபோல மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மீரா மிதுன் முகத்திரையை கிழிக்கும் வகையில் பல்வேறு ஷாக்கிங்கான விஷயங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் ஜோ மைக்கேல். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன், ஜோ மைக்கேல் மீது கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் யோ மைக்கேல் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு :

ஆனால், உண்மையில் மீரா மிதுன் தான் ஜோ மைக்கலை தொடர்ந்து அவதூறாக பேசி வந்ததோடு தனது நண்பரிடம் போனில் பேசும்போது அவரை ஆள் வைத்து கொலை செய்து விடலாம் என்று பேசியிருந்தார். அந்த ஆடியோவும் அப்போது வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அந்த ஆடியோவில் தான் அப்படி பேசவே இல்லை என்றும் கூறியிருந்தார் மீரா மிதுன். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோம் மைக்கல் இது தொடர்பாக மீராவின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பு :

மீரா மிதுன், ஜோ மைக்கேல் வைத்த குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் மீரா மிதுன், தான் ஜோ மைக்கேல் குறித்து பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் ஒரு வார காலம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மற்றொரு பிரிவில் 4000 அபராதம் விதித்தும், அந்த அபராத தொகையை கட்ட தவறினால் நான்கு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

Advertisement