நானே பெரியார் சார்பாக உருவெடுத்து இதை மாத்துவேன் – மீரா மிதுனின் சபத வீடியோ.

0
13237
meeramithun
- Advertisement -

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைபோட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில், இதுதான் உன்னுடைய கடைசி எச்சரிக்கையாக இருக்க போகிறது திரிஷா அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை ஏத்திக்கொள்வீர்கள் என்று பாத்திட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மீரா மிதுன், இதுவரை யாரும் எனக்காக குரல் கொடுக்கவில்லை. நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறும் என்று யாரும் உறுதி அளிக்கவில்லை. அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் கூட உறுதி அளிக்கவில்லை. இரவு பகலாக இந்த படத்திற்காக நான் செலவழித்த நேரமும் என்னுடைய உழைப்பும் அத்தனையும் வேஸ்ட் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன், திரிஷா இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து இருக்க காரணம் அவரின் ஜாதி தான். திரிஷாவின் அப்பா ஒரு உயர் ஜாதியினர் என்பதால் தான் திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement