விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் தன்னை பார்த்து காப்பி எடுத்தது தான் என்று கூறியுள்ளார் மீரா மிதுன். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தெலுங்கர். ஆனால், தன்னை தமிழர் என்று கூறி அனைவரையும் ஏமாற்றி வருகிறார். மேலும், பக்கத்து வீட்டு பெண்ணை போல படத்தில் நடித்துவிட்டு தானே எதுவோ கடின உழைப்பால் வந்தவர் என்று ஏமாற்றி வருகிறார் என்றும் கூறியிருக்கிறார் மீர மிதுன்.
ஏற்கனவே இவர் நயன்தாரா, திரிஷா, கங்கனா ரணாவத் என்று பலரையும் விமர்சித்து ட்வீட் செய்து இருந்தார். சமீபத்தில் திரிஷா குறித்து ட்வீட் செய்திருந்த இவர். இதுதான் உன்னுடைய கடைசி எச்சரிக்கையாக இருக்க போகிறது திரிஷா அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை ஏத்திக்கொள்வீர்கள் என்று கூறியிருந்தார்.