ஆரிக்கு ரசிகர்களே கிடையாது, அவர எல்லாரும் கழுவி உத்தராங்க – லீக்கான மீரா மிதுனின் ஆடியோ.

0
6971
aari
- Advertisement -

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பலர் மனதையும் கொள்ளைகொண்ட ஆரி குறித்து நடிகை மீரா மிதுன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார்.

- Advertisement -

இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் ஆரி பற்றியும் பாலாஜி பற்றியும் பேசியுள்ள மீரா மிதுன், எனக்கு ஆரி பற்றி 6 வருசத்துக்கு முன்னாடியே தெரியும். அவர் வெளியில் தான் நல்லவன் போல இருப்பார். ஆனால், உள்ளே அவர் நல்லவன் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும், ஆரிக்கு கமலின் ஆதரவு இருக்கிறது. மற்றவர்கள் சொல்வது போல அவருக்கு ரசிகர்கள் எல்லாம் கிடையாது.

வீடியோவில் 4 நிமிடத்தில் பார்க்கவும்

அனைவரும் அவரை கழுவி கழுவி தான் ஊற்றுகிறார். உண்மையில் ஆரியை விட பாலாஜி தான் பல திறமைகளை உடையவர். அவர் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் மீரா. ஆரிக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனாலேயே இவரது பெயர் பல முறை ட்விட்டரில் கூட ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இவர் தான் இந்த சீசன் வின்னர் என்று பலரும் கூறி வரும் நிலையில் மீரா மிதுன் ஆரி பற்றி இப்படி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement