பொய் சொல்லி சேரனிடம் வசமாக சிக்கித்தவித்த மீரா.! அவர் எத்தன பேர பாத்திருப்பாரு.!

0
1086
Meera-Mithun

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதுமே மீரா மிதுன் சுற்றியே தான் நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் பாத்திரம் கழுவும் பிரச்னையில் மீரா மிதனுக்கும் வணிதாவிற்கும் சண்டை முட்டியது. அதன் பின்னர் இந்த பிரச்சனை குறித்து சேரன், மீரா மிதுனை அழைத்து அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது எதற்காக ஒரு பாத்திரம் கழுவ இத்தனை பிரச்சனை நீ பாத்திரம் கழுவும் டீம் தானே என்று கேட்டார். அதற்கு மீரா மிதுன் எனக்கு cold சார் அதனாலதான் நான் தண்ணியில் கைவைக்க யோசித்தேன் என்றார். உனக்கு cold (சளி) சொல்ற இல்ல அப்புறம் ஏன் மழையில நனைஞ்ச என்று சேரன் கேட்டதும் ஒரு நொடி மீரா மிதுன் திகைத்து போய் விடுகிறார்.

இதையும் பாருங்க : வயது வித்யாசம் பார்காமல் மோகன் வைத்யாவை இப்படி ஒரு வேலை வாங்கிய மீரா மிதுன்.! 

- Advertisement -

பின்னர் மீண்டும் அதே கேள்வியை சேரன் கேட்க, அது என்னுடை இஷ்டம் என்னுடை ஆசை அதான் மழையில் நனைந்தேன் என்று கூறினார் மீரா. அதன் பின்னர் சேரன், இவ்வளவு மனிதாபத்தை பற்றி பேசுற ஒரு தட்டை கழுவ முடியாதா என்று மீராவை கேட்க, உடனே மீரா மிதுன் எனக்கு ஒடம்பு சரியில்லை என்று மீண்டும் சப்பை சாக்கு சொல்கிறார்.

பின்னர் பேசும் சேரன், ஒரு தட்டை கழுவினால் ஒடம்பு சேரியில்லாமல் படுத்துடும்னா சொட்ட சொட்ட மழையில நனைந்தால் மட்டும் ஒன்னும் ஆகாதா என்று மீரா மிதுனை கேட்கிறார். அதற்கு பதில் பேசும் மீரா, என் வேலையை தவிர மத்தவங்க வேலைய நான் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். பின்னர் மீரா மிதுன் எது சொன்னாலும் கேட்க மாட்டார் என்று வந்த சேரன், உன் வேலைய ஒழுங்கா செய் என்று மீரா மிதுனை போய் தோல என்று சொல்லாத குறையாக சொல்லி விடுகிறார்.

-விளம்பரம்-

அதன் பின்னரும் மீரா குறுக்க குறுக்க பேசியதால் கடுப்பாகும் சேரன், என்னிடம் பதிலுக்கு பதில் பேசத்தே நான் சொல்வதை கொஞ்சம் வாங்கிக்கொள் என்று கூறிவிட்டு நீ வேலை செய்யும் நேரம் என்ன என்பதை நீயே முடிவு செய்து கொள் என்று முடித்துவிடுகிறார். நேற்றய நிகழ்ச்சியில் மீரா மிதுன் நடந்து கொண்ட விதம் அனைவரையுமே வெறுப்புக்குள்ளாக்கியது. யார் பேசினாலும் அவர்களின் பேச்சை முழுதாக காது கொடுத்து கேட்காத மீரா மீது தான் தவறு என்று தான் எண்ணம் தோன்றுகிறது.

Advertisement