அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் கொடுத்த ஜோதிகா – அதையும் கேலி செய்த மீரா மிதுன்.

0
4352
meera
- Advertisement -

கடந்த சில தினங்களாக வலைதளத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மீரா மிதுன். இவரின் அவதூறு பேச்சை கண்டித்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையத்தில் புகார்களை அளித்துள்ளார்கள். அப்போதும் விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் மீரா மிதுன். இப்படி ஒரு நிலையில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா செய்த உதவியை கூட மீரா மிதுன் விமர்சித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்தது.அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் கூறியது, தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு கொடூரமாக இருந்தது.

- Advertisement -

எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்கள் என்று கூறியிருந்தார். ஜோதிகா, மருத்துவமனையை பராமரிக்க சொன்ன கருத்தை விட்டுவிட்டு கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று சொன்னதை பலரும் பெரிதாக எடுத்துக்கொண்டார்கள். இப்படி ஒரு நிலையில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாயை ஜோதிகா வழங்கியுள்ளார்.

ஜோதிகாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல விஜய பாஸ்கர் கூட ஜோதிகாவின் இந்த செயலை பாராட்டி இருந்தார். ஆனால், இந்த செயலையும் கேவலமாக விமர்சித்து உள்ள மீரா மிதுன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement