இதான் விஜய் பொண்ணுங்கள மதிக்கறதா – விஜய் அசினின் வீடியோவை பதிவிட்ட மீரா மிதுன்.

0
3996
meera
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் மீராமிதுன் தான் விஜய் மற்றும் சூர்யா வின் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அப்போதும் இவருக்கு பிரபலம் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களை திட்டி தீர்த்து அதன் மூலம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சூர்யா மற்றும் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார்.

-விளம்பரம்-

இவரது எல்லை மீறிய பேச்சுகளால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது மேலும் ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் இவர் மீது புகார்களை கூட அளித்துள்ளார்கள். எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போதும் விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து சர்ச்சையான ட்வீட்களை செய்து வருகிறார் மீரா மிதுன். அதிலும் கடந்த சில நாட்களாக விஜய் குறித்து தான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் விஜய் மரக்கன்று நட்டத்தை கூட மீரா மிதுன் கேலி செய்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மீரா மிதுன் மீண்டும் விஜய்யை சீண்டும் வகையில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ”இவ்வாறு கமன்ட் செய்து உள்ளார். பெண்கள் மீதும் அவர்கள் அணியும் ஆடைகள் மீதும் விஜய் காட்டும் மரியாதை இது தானா ?

ஒரு கோலா விளம்பரத்துல நடிச்சிட்டு கத்தி படத்துல தண்ணீர் பிரச்சனை பத்தி பேசினது போல சிங்கபெண்ணேனு சொல்லுவாரு போல. என்னுடைய டீவீடிக்கு பதில் கொடுத்தால் நீங்கள் பெண்கள் சுதந்திரத்தை பற்றி பேசுவது போலி என்று தான் அர்த்தம் என்று கூறியுள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை மேலும் சீண்டியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement