ஒரு பொண்ணா எனக்கே அசிங்கமா இருக்கு – மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் – மாஸ்டர் பட நடிகை ஆவேசம்.

0
6362
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார். இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே வருகிறார். அதிலும் விஜய், சூர்யா என்று உச்ச நட்சத்திரங்களை மிகவும் கேவலமாக பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் கைது செய்யப்பட வேண்டும் என்று மாஸ்டர் பட நடிகை பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சௌந்தர்யா கலந்து கொண்டவர். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார். ஆம், இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Soundarya Bala Nandakumar Wiki, Biography, Age, Movies, Images ...

அதே போல இவர் மீரா மிதுன் பங்கேற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்று ஒரு பாட்டு கச்சேரியே நடத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மீரா மிதுனின் அட்ராசிட்டிகளை பொறுக்க முடியாமல் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், மீரா மிதுனை சமூக ஊடக தளங்களில் இருந்து தடை செய்ய அதிக நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.அல்லது மற்ற நபர்களை பற்றி அவதூறாக பேசி வருவதால் அவரை கண்டிப்பாக சிறையில் வைக்க வேண்டும். ஒரு பெண்ணாக இதுபோன்ற கொச்சையாக பேசும் பெண்ணை பார்க்கும்போது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement