ஒரு 2000 அனுப்பு, பணம் கேட்டு கெஞ்சியுள்ள சூப்பர் மாடல் – ஜோ மைக்கேல் வெளியிட்ட ஆதாரம்.

0
109960
meera

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

மேலும், மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அடையார் போலீஸ் நிலையத்திற்கு ஜோ மைக்கேல் ஆஜராக வேண்டும் என்று இரண்டு மூன்று முறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், ஜோ மைக்கேல் ஆஜர் ஆகாததால் அவரை விசாரணைக்கு அழைக்க பெண் போலீசார் சில சென்ற போது அவர்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் ஜோ மைக்கலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது வெளியில் வந்துள்ள ஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

அந்த வகையில் மீரா மிதுன் யாரோ ஒருவரிடம் பணம் கேட்டு டெக்ஸ்ட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிலும் அந்த நபரிடம் தன்னால் இப்போது வெளியில் வர முடியாது என்றும், தனக்கு ஒரு 2000 ரூபாய் அனுப்பு விடுமாறும் கெஞ்சியுள்ளார் சூப்பர் மாடல் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement