‘வாய்ல சொல்ல முடியாத அளவுக்கு திட்றாங்க’மீண்டும் மீரா மிதுன் மீது போலீசில் புகார் (ஜெயிலுக்கு போய் வந்தும் புத்தி வரலயே )

0
259
MeeraMithun
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பெயர் போனவராக திகழ்பவர் நடிகை மீரா மிதுன். இவர் மாடலிங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்களால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தேவையில்லாமல் பிரபலங்களையும் மக்களை குறித்தும் அவதூறாக பேசியதால் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் மீராவை விமர்சித்து கருத்து போட்டு இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு பட்டியலினத்தவரை தர குறைவாக பேசிய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு இருந்தார். பின் ஜாமின் கோரி இருந்த மீரா மிதுன், தனக்கு பல படங்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-
meera

ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பிறகு போராடி சமீபத்தில் தான் இவர் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு மீரா முற்றும் துறந்த நானி போல் பேட்டி அளித்து இருந்தார். இதனிடையே இவர் பேய காணோம் என்ற படத்தில் நடித்து இருந்தார். குளோபல் எண்டர் டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மீரா மீது அளித்த பேட்டி:

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு போது கொடைக்கானலில் இருந்து மீரா காணோம் என்று பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. பின் எப்படியே படத்தை எடுத்து முடித்தார்கள். அதே போல், எனக்கு சில வருடங்களாகவே முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், அது நடக்கக் கூடாது என்று சிலர் நினைத்து தான் என்னை தவறாக சித்தரித்து வருகிறார்கள். நான் எதற்கும் பயப்படமாட்டேன், பொய் பேச மாட்டேன். இது மக்களுக்கும் தெரியும். துணிந்து போராடுவேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மீண்டும் சர்ச்சையில் மீரா மிதுன்:

இப்படி சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சையை மீரா மிதுன் கிளப்பி விடுகிறார். இந்நிலையில் மீண்டும் மீரா மிதுன் சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீரா மிதுன் அவர்கள் தற்போது பேயை காணோம் என்ற படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் சேர்ந்து மீராமிதுன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள். பின் இதுகுறித்து அவர்கள் பேட்டியில் கூறியிருப்பது, மீரா மிதுன் பேயை காணோம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் படத்தின் தயாரிப்பாளர் சுருளியிடம் போனில் ரொம்ப அசிங்க அசிங்கமாக பேசி தொல்லை செய்கிறார்.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் இடம் மீரா சண்டை போட்ட காரணம்:

அதுமட்டுமில்லாமல் வாயில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலமாக அந்த அம்மா பேசுகிறார். படத்தைப் பற்றியே பேசவில்லை. மொத்தமாக அவர் திட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும், நான் நடித்த படம் 100 முதற் 200 கோடி வரை போகும். நீங்கள் 100 கோடிக்கு கீழ் விற்க கூடாது என்று என்னிடம் சண்டை போடுகிறார். படம் எவ்வளவு போகும், எவ்வளவு கொடுக்கலாம் என்று தயாரிப்பாளர் நான் தான் முடிவு செய்யனும். நடித்ததோடு உங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று சொன்னேன். ஆனால், அவர் 100 கோடிக்கு கீழ் விற்றால் என்னுடைய தகுதி குறைந்துவிடும் என்று சொன்னார்.

மீரா மிதுனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்:

அதற்கு நான், எவ்வளவுக்கு போகுமா அவ்வளுக்கு தான் படத்தை கொடுக்க முடியும் என்று சொன்னேன். உடனே அவர் தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். இப்படி அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டிய ஆடியோ என்னிடம் இருக்கு. அதை நான் போலீசில் அளித்து இருக்கிறேன். உங்களுக்கும் அந்த ஆடியோவை தருகிறேன் என்று கூறி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தவுடன் நெட்டிசன்கள் அனைவரும் வழக்கம்போல் மீராமிதுனை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Advertisement