நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீரா..

0
6873
Meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு சளைக்காமல் இருந்து வந்தது. அதிலும் சமீபத்தில் முடிந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்ற ஒருசில போட்டியாளர்கள் செய்தசர்ச்சையான விஷயங்களால் இந்த சீசனின் டிஆர்பி எகிறி விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் சர்ச்சைக்கு மறு உருவமான மீராமிதுன் இந்த சீசனில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாளராக இருந்து வந்தா.ர் மாடலும் நடிகையுமான மீரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மேலும், மாடல் அழகி என்ற பெயரில் இவர் பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் ஜோ மைக்கேல் என்பவர் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

பண மோசடி வழக்கில் மீரா மிதுன் கைதாக இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே பண மோசடி வழக்கில் இவரை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். வெளியில் இத்தனை சர்ச்சைகளை சந்தித்தது பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார் மீரா. ஆனால், குறும்படம் போட்டு சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபித்து விட்டனர். இருப்பினும் உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டுதான் இருந்தார் மீரா.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ்லியா போட்ட முதல் பதிவு.. என்ன கூறியுள்ளார் ?

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீராமிதுன். அதிலும் சேரன் பற்றி தவறான பதிவுகளை போட வேண்டும் என்று மீரா மதன் தனது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆக மீராமிதுன் மீண்டும் பாஸ் வீட்டிற்கு செல்வதாக இருந்தார். ஆனால், அதற்கு முன்பாக முகெனும் தானும் மிகவும் நெருக்கமாக இருப்பது போல வீடியோக்களை தயார் செய்து அதனை தான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு பதிவிட வேண்டும் என்று மீராமிதுன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி தொடர்ந்து கூறிவரும் மீராமிதுன் தற்போது தமிழ் சினிமாவின் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னரே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்களால் இவர் நடித்த காட்சிகள் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் நம்ம வீட்டுப் பிள்ளை படக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் மீராமிதுன். சரி, இந்த படத்தில்தான் எப்படி ஆனது என்றால் மீராமிதுன் நடிப்பதாக இருந்த அடுத்த படத்தில் இருந்தும் தற்போது அம்மணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட்டனர்.

-விளம்பரம்-

நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து மீரா மிதுன்,  ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.  ஆனால், இந்த படத்தில் இருந்து மீரா மிதுனை எந்தவித முன் அறிவிப்பையுமின்றி நீக்கியுள்ளனர். இதனால் மீரா மிதுன் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மீரா மிதுன் கதாபாத்திரத்தில் தற்போது கமலின் மகள் அக்ஷரா ஹாசன் கமிட் ஆகியுள்ளார்.

Advertisement