பிக் பாஸிற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ்லியா போட்ட முதல் பதிவு.. என்ன கூறியுள்ளார் ?

0
6282
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரே நாளில் இவருக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது இதற்கு முக்கிய காரணமே இவரது க்யூட்டான தோற்றம் என்றே கூறலாம்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த லாஸ்லியா பின்னர் கவின் மீது காதல் வயப்பட்டார். சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் சீசன் முழுக்க கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதைதான் ஓடிக்கொண்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் சமூகவலைதளத்தில் எக்கச்சக்க ஆர்மி கூட உருவானது. இதனால்தான் லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாகாவும் பார்க்கப்படுகிறது. லாஸ்லியா விஷயத்தில் அவரது தந்தை கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார். இருப்பினும் இறுதிவரை கவின் உடனான உறவை துண்டிக்காமல் இருந்து வந்தார் லாஸ்லியா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர்கள் இருவரும் இதுவரை ஏன் சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் முதல் பட்டத்தை வெல்வார் என்று இவரது ரசிங்கர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : இறுதியில் காதலை ஒப்புக்கொண்ட முகென்.. அவரும் ஓகே சொல்லிட்டாராம்..

- Advertisement -

ஆனால், இவருக்கோ இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து அன்பை பொழிந்து வருகின்றனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்களும் வெளியே வந்த அடுத்த நாளே புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிறைவடைந்து நான்கு நாட்கள் ஆன நிலையிலும் லாஸ்லியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்தார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியா இதுவரை பாத்திமாபாபு, வனிதா, அபிராமி, சேரன் என்று பல்வேறு போட்டியாளர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாக இல்லை. இதனால் லாஸ்லியா எப்போது சந்திக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அள்ளி வீசி வருகின்றனர். ஆனால், நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆன நிலையிலும் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலை காண்பிக்கவே இல்லை. இதனால் ரசிகர்களும் கொஞ்சம் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதலில் எனக்கு அளவு கடந்த அன்பை கொடுத்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த அனைவருக்கும் நன்றிகள். வெறும் நன்றி என்ற சிறு வார்த்தை உங்களுக்கு போதாது என்பது எனக்கு தெரியும். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை எண்ணி நான் மிகவும் வியந்து போயிருக்கிறேன். அதற்கு மிக்க நன்றி. இதுநாள் வரை நான் என்இன்ஸ்டாகிராமில் வராமல் இருந்ததற்கு என்னை மன்னியுங்கள். கண்டிப்பாக உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன். இது உங்களுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement