மொதல்ல இத கத்துக்கோங்க – விஜய்யிடம் மன்னிப்பு கேட்க சொன்ன விவேக்கிற்க்கே அட்வைஸ் செய்த மீரா மிதுன்.

0
3134
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருப்பது மீராமிதுன் ட்விட்டர் பதிவுகள் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான மீராமிதுன் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஆபாச புகைப்படங்களை பதிவிடுவது, புகை பிடிப்பது, மது குடிப்பது என்று பல்வேறு சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

என்னென்னவோ கொரலி வித்தை கட்டியும் பிரபலம் அடையாததால், தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களை குறிவைத்து ட்விட்டரில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான பதிவுகளை செய்து வந்தார். அப்போது அம்மணிக்கு பிரபலம் ஏற்படாததால், தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வரும் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் பெரும் வைரலாக பரவ, தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவதூறான பதிவுகளை செய்து வருகிறார் மீரா மிதுன்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் மரக்கன்றை நட்டு, நடிகர் விஜய்க்கு மரக்கன்று நட சவால் விட்டிருந்தார் இந்த சவாலை ஏற்று விஜய் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது, ஆனால் வழக்கம்போல மீராமிதுன் விஜய்யின் இந்த பதிவையும் கேலி செய்து இருந்தார்.

மேலும், உங்கள் வீட்டுக்குள்ளேயே மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் காத்துக்கொள்லுங்க என்று கேலியாக கூறியிருந்தார். இந்த நிலையில் மீரா மிதுனுக்கு நேரடியாக விவேக் ட்வீட் செய்துள்ளார். அதில், மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டுள்ள விஷயம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வை காயப் படுத்துவதாக இருக்கிறது. நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் அன்பை பெருங்கல். தயவு செய்து இந்த இருவரையும் ஒப்பிடாதீர்கள். இது என்னுடைய வேண்டுகோள் என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், வழக்கம்போல தனது திமிரை காட்டயுள்ள மீரா மிதுன் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் மற்றவர்கள் விமர்சிக்க உரிமை இருக்கிறது. பிரபலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. அதே சமயம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். விமர்சனங்களை வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement