பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?? அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் சர்ச்சை நாயகியாக உள்ளவர். எப்போதும் ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மீரா மிதுனும் ஒருவர். தற்போது மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய தந்தை புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், இது குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளில் சிக்கியவர்களுள் ஒருவராக மீரா மிதுன் திகழ்கிறார் என்றும் சொல்லலாம். நடிகை மீரா மிதுன் அவர்கள் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். அது மட்டும் இல்லாமல் மீரா மிதுன் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் தென் இந்தியா போட்டியின் வெற்றியாளர் ஆவார். ஆனால், அந்த வெற்றியை மீண்டும் அவரிடம் இருந்து பரித்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்தே. பின் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கிய "8 தோட்டாக்கள்" என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு மீரா மிதுன் அவர்கள் நுழைந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

இதனை தொடர்ந்து மீரா மிதுன் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த "தானா சேர்ந்த கூட்டம்" என்ற படத்தில் நடித்தார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் மீரா மிதுன் இயக்குநர் சேரன், மது என பிக் பாஸ் வீட்டில் ஒருத்தரை கூட விட்டு வைக்கவில்லை. அனைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். இதனாலேயே இவரை பிக் பாஸ் வீட்டை விட்டு சீக்கிரம் வெளியேற்றினார்கள். அதற்கு பிறகும் மீரா மிதுன் வெளியே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் மீது பல புகார்கள் எழுதி வந்தார். இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் கூட இவர் லஞ்சம் ஒழிப்பு துறையில் அதிகாரியாக உள்ளார் என்று பல தகவல்கள் வந்தன. பின் அதெல்லாம் இல்லை என்று தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழக அரசையும் ,போலீசையும் பயங்கர குறை சொல்லி வந்தார்.
இதையும் பாருங்க : கருணாஸை தொடர்ந்து மகனை சினிமாவில் களமிறக்கும் சந்தானம். அதுவும் இந்த படத்திலா ?
இப்படி இவருடைய சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் பட்டியலிட்டே போகலாம் அந்த அளவிற்கு உள்ளது. தற்போது இவருடைய செய்தி என்னவென்றால், மீரா மிதுன் தன்னுடைய அப்பாவின் புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவருடைய அப்பா பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை பெற்று உள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் அவர் ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் சம்மந்தமே இல்லாமல் எதற்கு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B51qfQQHv5t/
இதன் மூலமாக ஏதாவது ஆதாயம் தேட விரும்புகிறாரோ?? என்று பல விமர்சனங்களையும், கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பட வாய்ப்பிற்காக சமீப காலமாகவே கவர்ச்சி புகைப்படங்களில் குதித்து உள்ளார். அது எல்லாம் வேலைக்கு ஆகவில்லை என்று தெரிந்து தான் இந்த புகைப்படம் மூலமாவது ஏதாவது கிடைக்குமா?? என்ற நோக்கில் உள்ளாரா?? என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.





