சமூக வலைதளத்தில் கடந்த மாதங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா. ஆனால், விஜய் மற்றும் சூர்யாவை தான் தவறாக பேசி விட்டேன் என்றும் இது அனைத்துக்கும் திருநங்கை அப்சரா தான் காரணம் என்றும் கூறி இருந்தார் மீரா மிதுன்.
இதையும் பாருங்க : கடற்கரையில் பேக் லெஸ் உடையில் போஸ் – ரசிகர்களை அலறவிட்ட வேதிகா.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தான் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி இருந்தார். மேலும், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை விற்பதாக அறிவித்து இருந்தார் மீரா மிதுன். மேலும், தனது சமூக வலைதள பாக்கத்தை வாங்க விரும்புவார்கள் வாங்கலாம் என்றும் கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யூடுயூப் சேனலில் சமையல் வீடியோகளை பதிவிட்டு வந்த பெண் ஒருவர் வாங்கி இருக்கிறார். மீரா மிதுன் சம்மந்தபட்ட அனைத்து பதிவுகளும் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர் மீரா மிதுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வாங்கிய சில நாட்களிலேயே இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை பலர் அன் பாலோ செய்து உள்ளார்கள். இதனால் அந்த பெண் என்ன தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார். மேலும், மீரா மிதுன் இன்ஸ்டாகிராம் கணக்கை வாங்கி தலையில் துண்டு விழாமல் இருந்தால் சரி.