மீராவை கழுவி ஊற்றிய நபர் இப்போ ஜால்ரா போடுறாரு. ஜோ மைக்கேல் வெளியிட்ட ஆதாரம்.

0
1861
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.

-விளம்பரம்-

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். ஆனால், கடந்த சில நாட்களாக இவர் தினமும் ஏதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தாலும் கவுல் பிராமின் என்பவர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். கவுல் பிராமின் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மீராவின் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இதையும் பாருங்க : நதியில் சொட்ட சொட்ட நனைந்து ஆட்டம் போட்ட நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா. சொக்கிப்போகும் ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், அந்த குறிப்பிட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யபட்ட அடுத்த கணமே அதனை மீரா மிதுன் லைக் செய்துவிடுவார். மேலும், அந்த கணக்கில் இருந்து பெரும்பாலும் மீரா மிதுனை புகழும் பதிவுகளும் வரும் இதனால் அந்த கணக்கையும் மீரா மிதுன் தான் பயன்படுத்தி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்திருந்தனர். ஆனால் கவுல் பிராமின் என்ற அந்த குறிப்பிட்ட கணக்கை பயன்படுத்தும் நபரோ, இது என்னுடைய கணக்கு, தான் மீரா மிதுனுக்கு ஆதரவாக பதிவிடுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் அதே போல கவுல் பிராமின், மீராவின் புகழை பாடி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் வழக்கம் போல, அவரை சோம்பு, ஜால்ரா என்றெல்லாம் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால், அவர்களை ஏதோ மீராவின் பாதுகாவலர் போல கவுல் பிராமினும் திட்டி தீர்த்தார். இந்த நிலையில் மீரா மிதுனின் பித்தலாட்டங்களை எல்லாம் கடந்த சில மாதங்களாக வெளிச்சம் போட்டு காண்பித்து வரும் ஜோ மைக்கேல் கவுல் பிராமினின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை கமன்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், கவுல் பிராமின், மீரா மிதுனின் ஒரு ட்விட்டர் பதிவுக்கு கீழ் பச்சை பச்சையாக திட்டி ட்வீட் போட்டுள்ளார்.அதனை குறிப்பிட்டுள்ள ஜோ மைக்கேல், இதுக்கு பேரு என்ன தெரியுமா ? எச்ச. கவுல் அடுத்த வாரம் விடியோவை கொடுக்க ரெடியா இரு. நான் வரேன் தேடி என்று பங்கமாக கலாய்த்துள்ளார். ஏற்கனவே, மீராவின் மேலாளர் ஒருவர் மீரா மிதுன் வேலையை முடித்து பணம் தராததால் அவரை திட்டி தீர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement