பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த தேதியில் மீரா வருவார்.! இவர் சொன்னா கண்டிப்பா நடக்கும் தான்.!

0
3612
meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Joe-michel

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதில் பேசியுள்ள பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

மீரா மிதுனின் பெயர் சமூக வலைத்தளத்தில் மிகவும் டேமேஜ் ஆனதற்கு முக்கிய காரணமே பிரபல பேஷன் நிறுவன உரிமையாளரான ஜோ மைக்கேல் என்பவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே மீரா மிதுன் குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய ஜோ மைக்கேல், மீராமிதுன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மீராமிதுன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவிருக்கிறார் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஜோ மைக்கேல். இது குறித்து பேசியுள்ள அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் பத்தாம் தேதி அதாவது இன்று மீராமிதுன் செல்ல இருக்கிறார் என்று பலரிடம் அவரே கூறி வந்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்வார். இத்தனை வழக்குகளில் சிக்கிய ஒரு நபரை எப்படி மீண்டும் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

Image result for meera mithun joe michael

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களாக சாக்ஸி அபிராமி மோகன் வைத்தியா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராகச் சென்று ஒரு சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் வெளியேறினர். இதனால் மீராமிதுனும் அதே பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இதனை ஜோ மைக்கேலே கூறி இருப்பதால் இது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்வாரா இல்லையா என்பது நாளை நமக்கு உறுதியாகிவிடும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.