அவர் ரொம்ப சந்தோசமாக இருப்பாரு – சனம் ஷெட்டி வெளியேற்றத்தை கேலி செய்த மீரா.

0
1855
meera

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி வெளியேற்றத்தை கேலி செய்யும் விதமாக மீரா மிதுன் ட்வீட் ஒன்றை செய்துள்லளார். மாடல் அழகியான இவர் மீராமிதுன் பங்குபெற்ற 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்தான்.அப்போது இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.மீரா மிதுனுக்கு முதல் இடம் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் தான் மீராமிதுன் இடமிருந்து பறிக்கப்பட்டு அந்த அழகி பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. மீரா மிதுன் , தமிழ் சினிமா நடிகர்களை பற்றி அவதூறாக பேசிய போது சனம் ஷெட்டி, மீரா மிதுனை கண்டித்து வீடியோ போட்டார்.

அன்றிலிருந்து இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை வெடித்தது. இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது குறித்து ட்வீட் போட்டுள்ள மீரா மிதுன் , தர்ஷன் தான் தற்போது உலகிலேயே மிகவும் சந்தோஷமான மனிதராக இருப்பார். காரணம், அவரின் முன்னாள் காதலியின் குணம் வெளியில் வந்துவிட்டது. சொர்க்கத்தில் இருந்து அம்புலி பட நடிகர் கூட சிரித்துக்கொண்டு இருப்பார். டுபாக்கூர் எப்போதும் டூபாக்கூராக தான் இருப்பார் என்று பதிவிட்டுள்ளார் .

-விளம்பரம்-
Advertisement