கலகம் மூட்டிய வனிதா.! பாத்திமாவிடம் கேவலமாக நடந்த மீரா.! இது ரெண்டாவது ஜூலி போல.!

0
3563
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மீராவை வனிதா அன் கோ வச்சி செய்த விஷயம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீரா அடித்த அந்தர் பல்டியை கண்டு அனைவரும் வியந்து தான் போனார்கள். இன்றைய நிகழ்ச்சியில் மீராவிடம், வனிதா உன்னை பற்றி பாத்திமா குறுகிய புத்தியை உடையவள் என்று பேசினார் அதை நான் காதால் கேட்டேன் என்றார்.

-விளம்பரம்-

- Advertisement -

உடனே கோபமடைந்த மீரா, பாத்திமாவிடம் சென்று என்னை பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்க , நான் ஒன்றும் பேசவில்லை என்று சொன்னார். அதன் பின்னர் தர்சனை பஞ்சாயத்திற்கு அழைத்த மீரா அவரிடமும் நீ ஏன் என்னை பத்தி மாத்தி பேசுறே என்று கத்தினார்.

பாத்திமா எவ்வளவோ சொல்லியும் கேட்காதா மீரா, என்னக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் பொய்யே சொன்னது இல்லை என்று எதிர்த்து பேசி கொண்டே இருக்க கடுப்பான தர்சன் பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்துகொள் என்றார். உடனே மீரா அங்கே இருந்து வேகமாக சென்று விட்டார்.

-விளம்பரம்-

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட மீராவை பிராங்க் செய்த டாஸ்கில் அனைவரும் மீராவை நாமினேட் செய்த்தனர். ஆனால், பாத்திமா மட்டும் தான் மீராவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். இதனால் வனிதா கூட நீங்கள் ஏன் மீராவை கடவுள் லெவலுக்கு பேசுகிறீர்கள் சாண்டையிட்டார்.

இருப்பினும் மீராவிற்கு ஆதரவாக தான் பேசி இருந்தார் பாத்திமா. ஆனால், வனிதா கொஞ்சம் கனிவாக பேசியதும் பாத்திமா மற்றும் மதுவை பற்றி வந்தாவிடமே மீரா பேசியதை பார்க்கும் போது இதற்கு முதல் சீசனில் இருந்த ஜூலியே மேல் என்று தான் எண்ணம் தோன்றுகிறது.

Advertisement