பெண்களை இழிவாக பேசும் வசனம் – கொள்ளித்தி போட்ட மீரா மிதுன். விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
1441
- Advertisement -

விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த காட்சியில் அரைகுறை ஆடையில் வரும் அசினை பார்த்து என்ன சேலையும் காணும் பாவாடையும் காணும் வெறும் ஜட்டியோடு நிற்கிற என்று கேட்டதும், அதற்கு அசின் இது ஷார்ட்ஸ் என்று கூறுவார். அதற்கு விஜய் உங்களுக்கு அது ஷார்ட்ஸ் எங்களுக்கு அது ஜட்டி என்று கூறுவார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் என்ன மேல மாராபப்பையும் காணும் ஜாக்கெட்டையும் காணும் வெறும் பிராவோடு இருக்கிறாய் என்று கேட்க அதற்கு அசின் இது ஸ்லீவ்லெஸ் என்று கூறுவார். அதற்கு விஜய் உங்களுக்கு அது ஸ்லீவ்லெஸ் எங்களுக்கு அது பிரா என்று கூறுவார். மேலும் பல பஞ்ச் வசனங்களை பேசிவிட்டு ஆண்டவன் ஆம்பளையா படைத்தது பொம்பளைக்கு பொம்பளை படைத்தது ஆம்பளைக்கு அவன் ஒட்டுமொத்தமாக படைத்துவிட்டான் ஆனால் நாம்தான் அடக்க ஒடுக்கமாக வாழ வேண்டும்.

- Advertisement -

ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டுமென்றால் அந்த ஒருத்தனுக்கு மட்டும் இப்படி உடம்பை காட்டு இப்படி ஊருக்கெல்லாம் காட்டினால் அப்புறம் ஊரில் உள்ள அத்தனை பசங்களும் உன்னுடன் வாழ நினைப்பான் என்று கூறுவார்.இந்த வசனம் என்னவோ எழுதியது பேரரசு தான் ஆனால் இந்த வசனம் தான் தற்போது சமூக வளைதளத்தில் விஜயை ஒரு பேசுபொருளாக மாற்றியிருக்கிறது.

விஜய்யின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் இப்படி வறுத்தெடுப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது மீராமிதுன் தான். ஆம் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் மீராமிதுன் விஜய்யின் இந்த வீடியோவை பதிவிட்டு, பெண்கள் மீதும் அவர்கள் அணியும் ஆடைகள் மீதும் விஜய் காட்டும் மரியாதை இது தானா ?ஒரு கோலா விளம்பரத்துல நடிச்சிட்டு கத்தி படத்துல தண்ணீர் பிரச்சனை பத்தி பேசினது போல சிங்கபெண்ணேனு சொல்லுவாரு போல.

-விளம்பரம்-

என்னுடைய டீவீடிக்கு பதில் கொடுத்தால் நீங்கள் பெண்கள் சுதந்திரத்தை பற்றி பேசுவது போலி என்று தான் அர்த்தம் என்று கூறியிருந்தார். மீரா மிதுன் இப்படி ஒரு டீவீட்டை போட்டு 6 நாட்கள் ஆன நிலையில் சமீபத்தில் இந்த வீடியோவை இலங்கை வாசி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் அதற்கு முக்கிய காரணம் ஈழப் பிரச்சனையின் போது நடிகர் விஜய் இலங்கை குறித்து பேசிய சர்ச்சையான விஷயங்கள் தான் அந்த பதிவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement