அன்று ஆஹா ஓஹோனு பாராட்டிட்டு, இன்று விஜயபாஸ்கர் குறித்து ட்வீட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன்.

0
3124
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகம் வெறுக்கப்பட்டு வந்த நபராக இருந்தார் மீரா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் சமூக வலைத்தளத்தில் கேவலமான பதிவுகளை செய்து வருகிறார். புகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மீராமிதுன் அவ்வப்போது முக்கிய பிரபலங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் முதலமைச்சர் குறித்தும் அமைச்சர் விஜய பாஸ்கர் குறித்தும் ட்வீட் செய்துள்ளது பலரின் கோபத்தை கிளறியுள்ளது.

- Advertisement -

தற்போது கொரோனா வைரஸ் காரணத்தால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சுகாதார துறை அமைச்சரான விஜய பாஸ்கர், இந்த கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பம்பரமாய் சுழன்று வந்தார். தமிழ்நாட்டு மக்களின் ரசிகராக மாறினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், இவரை மீம் கிரியேட்டரகளும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளிவருகின்றனர். மேலும்,மக்கள் மத்தியிலும் அடடா, இப்படி ஒரு அமைச்சரா என்று புகழாரம் சூட துவங்கினர்.

-விளம்பரம்-

அமைச்சர் மட்டுமல்லாமல் இவர் டாக்டர் என்பதால் கொரோனா குறித்து தெளிவான விளக்கங்களை மக்களுக்கு பேட்டிகள் மூலம் கூறி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். மேலும், பலரின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதோடு தற்போது சமூக வலைதளத்தின் மூலம் நோயாளியின் சிகிச்சைக்கு உதவி செய்து இருக்கிறார். இப்படி மக்கள் புகழ்ந்து வரும் ஒரு அமைச்சருக்கு வைத்து மேற்படி ட்வீட் செய்துள்ளது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் விஜயபாஸ்கரின் பொது நிகழ்ச்சியில் சந்தித்த போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் மீராமிதுன். மேலும் அந்த பதிவில் 24 மணிநேரமும் மக்களின் நலனுக்காக உழைக்கும் சிறந்த அமைச்சர் என்று பதிவிட்டிருந்தார் மீராமிதுன். ஆனால், தற்போது விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்று மீரா குறிப்பிட்டுள்ளது பிக் பாஸ் வீட்டில் இவர்போட்ட பச்சையான இரட்டை வேஷம் போலவே தோன்றுகிறது.

Advertisement