விவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா

0
32529
Meera-mitun
- Advertisement -

சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் சம்மந்தபட்ட 4 பேரையும் போலீசார் என்கௌண்டர் செய்த்ததால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் பிரியங்கா கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை மற்றவர்களை காப்பாற்றவே போலீசார் 4 பேரை சுட்டு கொன்று விட்டனர் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய மீரா மிதுன் இது போன்ற விஷயத்தில் பேசினால் மட்டும் போதாது. என் மீது தேவை இல்லாமல் சிலர் பொய்யான வழக்குகளை தொடர்ந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், நான் போலீஸ் மீதே புகார் அளித்தேன். இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்த பின்னர் விசாரணையில் என்ன நடந்தது என்று மக்களுக்கும், மீடியாக்களுக்கு போலீஸ் தெரியபடுத்த வேண்டும், ஒரு குடிமகனாக தெரிந்து கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று மீரா மிதுன் பேசிக்கொண்டு இருக்கும் போதே மற்றொரு முனையில் இருந்த பா ஜ க உறுப்பினர் மீனாட்சி, ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி சர்ச்சையாக பேசுவதே இப்போதெல்லாம் ட்ரெண்டிங் போல என்று நக்கலடித்தார்.

- Advertisement -

மீரா மிதுன் பேசி கொண்டு இருக்கும் போதே விவாத மேடையில் இருந்த மற்ற 3 பெண்களும் மீரா மிதுனை பேச விடாமல் மீரா மிதுனை விமர்சனம் செய்து கொண்டே இருந்ததால். இதுபோன்று என்னைபேச விடாமல் செய்வது தான் மேடை நாகரீகமா. இதெல்லாம் இந்த பெரியவர்களுக்கு தெரியாதா. இப்படி எல்லாம் பேசினால் நான் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறி விடுவேன். ஒரு சின்ன பொண்ணு பேசுவது உங்களுக்கு பொறுக்கவில்லையா. உங்களுக்கு என்ன ஈகோ தடுக்காத நீங்க என்ன சென்ஸோட பேசுறீங்க என்று கத்தி கூச்சல் போட்டார் மீரா.

மீரா மிதுனை தொடர்ந்து பேசிய லட்சமி ராமகிருஷ்ணன். ஒரு பெண் இவ்வளவு தைரியமாக பேசுவது என்னவோ பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால், 7 வயசு ஹாசினி என்ற பெண் கற்பழித்து கொல்லப்பட்ட போது நீங்கள் கேள்வி கேட்டீங்களா ? இல்லை வழக்கு போடீங்களா? இப்போ இந்த குற்றவாளிகளுக்காக கேள்வி கேட்கிறேன் என்று சொல்றீங்களே. பெண்களுக்கு எதிராக நடத்த வன்கொடுமைகளுக்கு எல்லாம் கேள்வி கேடீங்களா என்றார் லட்சுமி.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த மீரா, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு ஜாலியாக இருந்து வந்தேன். ஆனால், இதுபோன்ற அநீதி நடக்கும் போது தான் நான் உணர்ந்தேன். ஆனால், இந்த வருஷம் நான் போலீசாரால் அனுபவித்த அநீதியை அடுத்து தான் சாதாரண மக்களுக்கு போலீசாரால் ஏற்படும் அநீதிக்கு எதிராக நான் ஒரு அதிகாரியாக இறங்கி இந்த சமூகத்தை சுத்தம் செய்ய நினைதேன். எனக்கு இப்போதான் தான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. என்னை காப்பாற்ற இந்த தமிழ் நாட்டில் யாரும் இல்லை. ஆனால், நான் இந்த சமூகத்திற்கு உதவ நான் முன் வந்துளேன் என்று கூறினார் மீரா. அதன் பின்னர் லட்சமி ராமகிருஷ்னன் பேசும் போது, என்னை பேசவே விட மாட்டுகிறார்கள் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியில் தெறித்து ஓடினார் மீரா மிதுன்.

Advertisement