சமீபத்தில் ஜாமினில் வெளியான மீரா மிதுன் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். மீரா மிதுன் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார்.
பின் மீராமிதுன் அவர்கள் யூடியூப் வீடியோ மூலம் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதற்கு மீரா மிதுன் மிது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், சமீபத்தில் தான் மீராமி துன் சிறையிலிருந்து வெளிவந்தார்.
ஜாமீனில் வெளியில் வந்த மீரா மிதுன் :
சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மீராமிதுன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டேன். கடவுளுக்கும், எல்லோருக்கும் நன்றி. என்னால் அம்மாவும், தம்பியும் ரொம்ப பாதிக்கப்பட்டார்கள். இனிமேலாவது நான் நல்ல பெயர் எடுக்கணும்.அதற்கான முயற்சிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். மேலும், எதிர்காலத்தில் நான் மக்களோடு மக்களாக வாழ நினைக்கிறேன். தமிழ் திரையுலகினர் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் நடிப்பேன். நான் இதற்கு முன்னாடி நடித்த படங்கள் எல்லாம் தற்போது ரிலீஸ் ஆகுற வேலைகளில் உள்ளது.
சிறையில் இருந்து வெளிவந்த பின் பேசிய மீரா :
இனிமேல் மக்களுக்கு பிடித்த மீரா மிதுன் ஆக என்னைப் பார்ப்பார்கள். நான் கைதாகும் போது என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்று புரியாமல் இருந்தேன். நான் இனிமேல் கவனமாகவும், தெளிவாகவும் முடிவு எடுப்பேன். லாக்டவுன் சமயத்தில் நிறைய பிரச்சனைகள் வந்து விட்டது. நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை எனக்கு இந்த சமயத்தில் கடவுள் காட்டிக் கொடுத்துவிட்டார்.
திருந்திவிட்டதாக சொன்ன மீரா :
நான் இந்த மாதிரி எல்லாம் இருந்தது இல்லை. இந்த மாதிரிப் பொண்ணும் கிடையாது. நான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்து விட்டேன். நரகத்தை பார்த்து விட்டேன். அவரவர்கள் செய்ததை அவரஅவர்கள் அனுபவிப்பார்கள். முடிந்த அளவிற்கு நல்லது செய்யுங்கள், நல்ல பெயரை வாங்குங்கள்,நல்ல விஷயங்களை பேசுங்கள், நல்லவர்களுடன் இருங்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.
மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
மீரா மிதுன் ஜாமினில் வெளிவந்த போதிலும், இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்னர். இதன் அடிப்படையில் தற்போது மீராமிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, இந்த முறை மீரா மிதுன் கண்டிப்பாக ஜாமினில் வெளிவர முடியாது.