பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் முறை பணப்பெட்டி டாஸ்க்கை கொடுத்த பிக் பாஸ் – இந்த முறை Rules வேற லெவல்.

0
584
kathir
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் 3 லட்ச ரூபாயுடன் பணப்பையுடன் கதிரவன் வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் பணப் பெட்டி டாஸ்க்கை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் Adk வெளியேறி இருந்தார். அதே போல இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் அனைத்து போட்டியாளரும் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

- Advertisement -

மேலும், நேற்றய நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஒரு ஒரு நிமிடத்திற்கும் பணத்தின் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். எனவே இந்த முறை பணப்பெட்டி தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை பணப்பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியும் எழுந்து இருக்கிறது. மேலும், பிக் பாஸில் இருக்கும் விஜய் டிவி பிரபலங்களான அமுதவாணன் மற்றும் மைனா ஆகிய யாராவது இருவருக்கு பணப் பெட்டி செல்ல வேண்டும் என்றே மீண்டும் பணப் பெட்டி டாஸ்க்கை செட்டப் செய்து இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றர்.

அதற்கு முக்கிய காரணமே கண்டிப்பாக மைனா மற்றும் அமுதவாணன் இருவரும் டாப் 2 இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை என்பது பலரும் அறிந்த ஒன்று தான். எனவே, இந்த முறை பணப் பெட்டி தொகை கண்டிப்பாக அதிகரிக்கும். அதை மைனா அல்லது அமுதவாணன் இருவரில் யாராவது ஒருவர் எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆகும் பட்சத்தில் 4 பேருக்குள் மட்டுமே டைட்டில் வின்னருக்கான போட்டி நடைபெறும்.

Advertisement