முகென் பிறந்தநாளுக்கு யார் போய் இருக்காங்க பாருங்க.. அப்போ காதல் உண்மை தானா..

0
105251
mugen
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு இந்த சீசனில் காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். அபிராமி முதலில் கவினின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால்,கவின் கொஞ்சம் கூட அபிராமியை கண்டுகொள்ளவில்லை. பின்னர் கவினை கடுப்பு ஏற்றுவதற்காக தான் முகென் உடன் பழகினார். முதலில் நண்பனாக பழகினார் அபிராமி. பின் அவர் மீது அதுவே காதலாக மாறிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் அவர்கள் போட்டியின்போது ஹீரோ யார்? வில்லன் யார் ?என்ற டாஸ்க் வைத்திருந்தார், அதில் அபிராமி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய ஹீரோ முகென் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

-விளம்பரம்-
mugen lover

இதிலிருந்து அவர் அந்த அளவிற்கு முகென் மீது பைத்தியமாக காதல் செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து சக போட்டியாளர்களும் முகென் இடம் பேசினார்கள். ஆனால், முகென் ஏற்கனவே அபிராமிடம் நண்பனாக தான் பழகுகிறேன் என்று கூறினார். மேலும்,அபிராமி தன்னிடம் பழகுவது குறித்து முகென் கூறியது, நான் ஏற்கனவே நதியா என்ற பெண்ணை காதலித்து வருகிறேன். மேலும் ,பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் காதல் குறித்து பேசுவோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் வாழ்க்கை குறித்தும் நாங்கள் இருவரும் பேசி உள்ளோம் என்று கூறினார். இவ்வளவு பொறுமையாக முகென் எடுத்துச் சொல்லியும் அபிராமி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை தீவிரமாக முகெனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார்.

- Advertisement -

மேலும் ,பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகும் போது கூட தன்னுடைய ராசியான மோதிரத்தை முகெனுக்குக் கொடுத்துவிட்டு சென்றார். முகென் அதை கையில் போட்டுக் கொண்டார்.அதோடு முகென் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அபிராமி எனக்கு ஒரு நல்ல தோழி என்று தான் கூறி வருகிறார். இந்த நிலையில் காதலி என்று கூறிய நதியா இதுவரை எந்த ஒரு பேட்டியிலும், ஒரு வீடியோவிலும் கூட இது குறித்து பேசவில்லை. கடைசியாக முகென் பிக் பாஸ் இறுதிச்சுற்று செல்லும்போது மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் முகெனுக்கு வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.

பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்களுடைய காதல் பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன! நாங்க நதியா ஏற்கனவே ஆறு வருடங்களாக அனந்தராமன் என்பவரை காதலித்து வருவதாகிறார் என்றும் மேலும், அவருடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டிருந்தார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நதியாவுக்கு முகெனுக்கும் காதல் பிரேக் அப் ஆயிற்சி போல இருக்கு என பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for mugen rao birthday

அது மட்டும் இல்லைங்க இந்த நதியா என்பவர் மலேசியாவில் முகென் நடித்த ஆல்பங்களில் தன்னுடன் நடித்து வந்தவர். இந்நிலையில் முகென் எப்போதுமே தன்னுடைய கேரியர் விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதை தவிர இந்த காதல், கல்யாணம் போன்ற விஷயங்களில் கமிட்டாக மாட்டார் என்று கூறுகிறார்கள். உண்மையிலே நதியா,முகென் காதல் குறித்து அவர்களே மனம் திறந்து பேசினால் மட்டும் தான் உண்மை தெரியும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்அது மட்டும் இல்லைங்க முகெனுக்கு பிறந்தநாள். மேலும், முகென் பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார்கள்.

Advertisement