விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் அதிக காதல் கதை ஓடியது என்று கூறலாம். இந்த சீசனில் பல்வேறு இளம் போட்டியாளர்கள் பங்கு பெற்றது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 எத்தனையோ காதல் கதைகள் ஓடினாலும் இந்த சீசனில் முதன் முதலில் ரொமான்ஸை ஆரம்பித்தது அபிராமி தான்.
என்னதான் அபிராமி முகெனிடம் பலமுறை பல விதமாக தனது காதலைத் தெரிவித்தாலும், மிகவும் தெளிவான எண்ணத்துடன் இருந்த முகென், அபிராமி தனக்கு வெறும் தோழி மட்டும் தான் என்று ஆணித்தனமாக கூறிக் கொண்டுதான் இருந்தார். அதேபோல அபிராமி ஒரு கட்டத்தில் முகென் மீது அதிக காதலில் விழுந்து விட தனக்கு வெளியில் நதியா என்ற ஒரு பெண்ணின் மீது மிகவும் ஈர்ப்பு இருப்பதாகவும் நாங்கள் இருவரும் வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்களை பேசி உள்ளோம் என்றும் தனக்கு காதலி இருப்பதை சொல்லியும் சொல்லாமல் கூறியிருந்தார் முகேன்.
முகேன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில்முகென் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். சமீபத்தில் நதியாவின் பிறந்தநாளை கூட கேக் வெட்டி கொண்டாடி இருந்தார் முகென்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 10) முகென் தனது தாயின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் முகென் காதலியான நதியாவும் கலந்து கொண்டு இருக்கிறார். தனது அம்மாவின் பிறந்தநாள் கொண்டாடட்ட வீடீயோவை முகென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.