மீண்டும் அபிராமியிடம் மனமுறுகி அழும் முகென்.! மீண்டும் ஆரம்பிச்சிடுமோ.!

0
3320
mugan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 54 நாளை கடந்து விட்டது. கடந்த சில நாட்களாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி வைல்டு கார்டு போட்டியாளராக களம் இறங்கினார். அவர் வந்த பின்பும் நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் நடக்கவில்லை.

-விளம்பரம்-

எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வனிதாவை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். இவர் உள்ளே சென்ற முதல் நாளில் இருந்தே மற்ற போட்டியாளர்களை கொம்பு சீவி விட்டு சண்டை மூட்டி கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இருப்பினும் இவர் வந்த பிறகு நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

இதையும் பாருங்க : பெண்கள் தான் மோசமான எதிரிகள்.! குறும்படத்தை பகிர்ந்து மதுவிற்கு பதில் கூறியுள்ள காஜல்.!

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பரப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், கஸ்தூரி மற்றும் அபிராமி சிறைக்கு அனுப்பபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் கவின், லாஸ்லியா, முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். மேலும், இந்த வாரம் நடைபெற்று வரும் ஒட்டிங்கில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது. எனவே, இந்த வாரம் அபிராமி தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement