முகென் காதலிப்பதாக சொல்லும் நதியா வேறு ஒருவரை காதலிக்கிறாரா.. வைரலாகும் புகைப்படம்..

0
13995
mugen lover

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் அதிக காதல் கதை ஓடியது என்று கூறலாம். இந்த சீசனில் பல்வேறு இளம் போட்டியாளர்கள் பங்கு பெற்றது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 எத்தனையோ காதல் கதைகள் ஓடினாலும் இந்த சீசனில் முதன் முதலில் ரொமான்ஸை ஆரம்பித்தது அபிராமி தான்.

கவின் மீது தனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருப்பதாகவும் அனைவர் முன்பும் தெரிவித்தார் அபிராமி. ஆனால், கவின் அபிராமியை கொஞ்சம் நிராகரிக்கவே அந்த வெறுப்பில் முகென் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் அபிராமி. ஆரம்பத்தில் கவினை வெறுப்பேற்ற தான் முகேனிடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் அபிராமி. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியது. என்னதான் அபிராமி முகெனிடம் பலமுறை பல விதமாக தனது காதலைத் தெரிவித்தாலும், மிகவும் தெளிவான எண்ணத்துடன் இருந்த முகென், அபிராமி தனக்கு வெறும் தோழி மட்டும் தான் என்று ஆணித்தனமாக கூறிக் கொண்டுதான் இருந்தார். அதேபோல அபிராமி ஒரு கட்டத்தில் முகென் மீது அதிக காதலில் விழுந்து விட தனக்கு வெளியில் நதியா என்ற ஒரு பெண்ணின் மீது மிகவும் ஈர்ப்பு இருப்பதாகவும் நாங்கள் இருவரும் வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்களை பேசி உள்ளோம் என்றும் தனக்கு காதலி இருப்பதை சொல்லியும் சொல்லாமல் கூறியிருந்தார் முகேன்.

- Advertisement -

முகேன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில்முகென் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். சமீபத்தில் பேட்டியில் முகெனிடம் உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன ? அவர்கள் அதற்கு சம்மதித்து விட்டார்களா ? என்று கேள்வி கேட்ட போது ஆரம்பத்தில் கொஞ்சம் சிரித்தபடி முகென், அதன் பின்னர் ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் என்று தனது காதலை உறுதி செய்திருந்தார் முகேன்.

ஆனால், முகேனின் காதல் குறித்து இது வரை நதியா எதுவும் கூறாமல் இருக்கிறார் . இந்த நிலையில் முகென் காதலிப்பதாக கூறப்படும் நதியா, பூவைந்தர அனந்தராமன் என்பவரை 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வருவதாகவும் மேலும், அவருடன் நதியா எடுத்துக்கொண்ட சில நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நதியா அவரை தான் காதலிக்கிறார் என்றும், அவர்கள் இருவரும் எந்த பிரச்சனையும் இன்றி காதலித்து வருவதாகவும் ஒரு செய்து வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், முகேனுக்கு நதியா மீது வெறும் க்ரஷ் இருப்பதாக மட்டும் தான் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மற்றபடி முகென் திரை துறையில் சாதிப்பது குறித்து தனது கவனத்தை செலுத்த துவங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனவே, முகென் அல்லது நதியா இவர்கள் இருவரில் யாராவது இது குறித்து பேசினாலே ஒழிய முகென், நதியா காதல் உண்மையா இல்லையா என்பது தெரியும்.

Advertisement