முதல் படத்திலேயே இந்திய அழகியுடன் ஜோடி போடும் முகேன் – பர்ஸ்ட் லுக் இதோ.

0
28545
mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட கடந்த ஆண்டு ஒளிபரண மூன்றாவது சீசன் மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.

-விளம்பரம்-

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் முகேன் பெரும்பாலும் சென்னையில் தான் இருந்து வந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் முகென், ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

அந்த படத்திற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இவர் ஏற்கனவே ‘வெப்பம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த படத்திற்கு நிவாஸ் பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக 2018ல் மிஸ் இந்திய World பட்டம் வென்ற அனுக்ரிதி வாஸ் நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களில் நடித்த கிஷோரும் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement