சென்னையில் உள்ள பிரபல மாலுக்கு சென்ற முகென்.! சூழ்ந்த பெண் ரசிகைகள்.! வைரலாகும் வீடியோ.!

0
8881

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.மேலும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தான் என்று அறிவித்தார்கள்.முகின் ராவ் மலேசியாவை சேர்ந்தவர். .முகென் பிறந்தது , வளர்ந்தது,படித்தது எல்லாமே மலேசியாவில் தான். இவர் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் ஆல்பங்கள் வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ். முகென் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம். முகென் ராவ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் இடத்தில் பிறந்தார். இவருக்கு எம்.ஜி.ஆர். என்ற மற்றொரு பெயரும் உண்டு. முகென் அப்பா பெயர் பிரகாஷ் ராவ் கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர். அம்மா பெயர் நிர்மலாதேவி, இவங்க மலேசியாவில் இருக்கிற கம்பெனியில வேலை பார்க்கிறார்கள். முகென்னுக்கு கனேஷ் ராவ் என்ற சகோதரனும்,ஜனனி என்ற சகோதரியும் உள்ளார்கள். முகென் தன்னுடைய பள்ளிப்படிப்பை கோலாலம்பூரில் முடித்தார்,மலேசியாவில் உள்ள கல்லூரியில் டிப்ளமோவை முடித்தார்.

- Advertisement -

அது மட்டும் இல்லைங்க இவருடைய பாட்டு எல்லாமே வேற லெவல் என்று கூட சொல்லலாம்.அந்த அளவிற்கு யூடூப்பில் ஹிட்டாக உள்ளது. முகினுக்கு தன்னுடைய இளம் பருவத்தில் அப்பா மேடையில் பாடும்போது வரும் கைத்தட்டல் மீது ஆசைப்பட்டு தானும் பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசை பட்டாராம் . மேலும், நமக்கும் இந்த மாதிரி கைதட்டல் வேண்டும் என்று ஆசை வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.அதற்காக முதலில் தன் அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாட தொடங்கினார். பின்னர் தன் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடத் தொடங்கினார்.பின்னர் அவரே எழுதி பாடல்களை பாடத் தொடங்கினர்.

mugen

மேலும் ஷார்ட் பிலிம்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து கிட்கட் ,கேஎஃப்சி போன்ற விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.மேலும்,முகினுக்கு 2011ஆம் ஆண்டு பெஸ்ட் ஆக்டர் என்ற விருது வழங்கினார்கள்.மேலும், “கயல்விழி, அன்பே ஆருயிரே, வெறிச்சோடி, காதலி ,கண்ணே, அபிநயா, போகிறேன்” போன்ற பல பாடல்களை எழுதி யூடியூப்களில் தெறிக்க விட்டு இருக்காருன்னு சொல்லலாம். இந்த பாடல்களில் அவருடைய பேவரட் பாட்டுன்னு சொன்னா ‘கயல்விழி மற்றும் போகிறேன்’ என்ற பாடல்தான் என்று சொல்லியிருக்கிறார். இவருடைய மிகப் பெரிய ஆசை என்னவென்று பார்த்தால் ஒரு மிகப் பிரபலமான அருங்காட்சியத்தில் எனக்கு ஒரு மெழுகு சிலை வைக்க வேண்டும். அது பக்கத்தில் நின்று நான் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, கனவு என்று கூறினார்.முகின் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர்.

-விளம்பரம்-

முகென் பாடிய பாடல்களில் ஒன்றான கயல்விழி என்ற பாடல் பெரிய அளவு ஹிட்டாச்சி இதனால் முகினுக்கு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சிறப்பாகவும் விளையாடி வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் கான மகுடத்தை சூடி உள்ளார். அதோடு மட்டும் இல்லைங்க மலேசியா மக்களோடு தமிழக மக்களின் மனதிலும் அதிக இடமும் பிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை அன்பு ஒன்று தான் அனாதை என்று முகென் அடிக்கடி கூறி வருவார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முகெனுக்கு கோடி கணக்கான ரசிகர்களின் அன்பும் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரும் இன்னமும் தாயகம் திரும்பாமல் இருக்கிறார் முகென். சமீபத்தில் முகென் சென்னையில் உள்ள பிரபல EA மாலுக்கு சென்றுள்ளார். அங்கே முகெனை கண்ட ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுக்க துவங்கினர். அதிலும் அவரை பெண் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

Advertisement