கையில் இருந்த முன்னாள் காதலரின் டாட்டூ. திருமணத்திற்க்கு பின் மாற்றிக்கொண்ட மானசா.

0
177026
alya-manasa
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ‘ராஜா ராணி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான வரலாற்றில் வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று எனவும் கூறலாம். இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஆல்யா மானஸா.

-விளம்பரம்-
Image result for alya manasa  tatoo

ஆல்யா மானஸா, சமீபத்தில் தான் இதே தொடரில் நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆல்யா மானஸா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானஸா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவரார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். ஆரம்பத்தில் ஆல்யா மானஸா தான் மானஸிடம் தனது காதலை தெரிவித்திருந்தார். முதலில் அதை மறுத்துள்ள மானஸ் பின்னர் ஆலியாவின் காதலை ஏற்றுக்கொண்டார்.

- Advertisement -

இருவரும்காதலிக்கும் போது அடிக்கடி இவர்கள் ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆல்யா மானஸா தனது சமூக வலைத்தளத்தில் கூட பதிவிட்டிருந்தார். மேலும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூட பலரும் நினைத்தார்கள். அதேபோல இவர்கள் இருவரும் காதலித்து போது ஒருவரின் ஒருவர் பெயர்களை தங்களது கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். அந்த புகைப்படங்களை கூட இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்கள். ஆனால், சில மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களது காதல், பின்னர் பிரேக்கப்பில் முடிந்தது. அதன்பின்னர் ஆலியா மானசா தன்னுடன் ‘ராஜா ராணி’ தொடரில் நடித்து வந்தசஞ்ஜீவை காதலிக்க துவங்கினார்.

Image result for alya manasa  tatoo

அதேபோல மானஸம் சுபிக்ஷா என்ற பெண்ணை காதலிக்க துவங்கி விட்டார். இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடைபெற்று விட்டது. இப்படி இருவரும் பிரேக்கப் செய்த பின்னர் தங்களுக்கான துணையை தேடிக் கொண்டார்கள். அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆல்யா மானசா சஞ்சீவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காததால், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவின் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல ஆல்யா மானசா மற்றும் மானஸ் இருவரும் தாங்கள் காதலித்த போது குத்திக்கொண்ட பெயர்களை தற்போது நீக்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-

அதில் ஆல்யா மானஸா, சஞ்சீவை காதலிக்க துவங்கிவுடன் தனது கையில் இருந்த டாட்டூவை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளார். அதை நீங்கள் படத்தில் காணலாம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சிம்புவை காதலித்த பின்னர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். மேலும் , பிரபுதேவாவை காதலித்த போது பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் ஆனால், பிரபுதேவாவுடன் பிரேக்கப் ஆனதும். அந்த டாட்டூவை பாசிட்டிவ் என்று மாற்றிக்கொண்டு இருந்தார் நயன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஸ்டைலில் மானஸாவும் தனது முன்னாள் காதலரின் டாட்டூவை இப்படி மாற்றிக்கொண்டுள்ளார்.

Advertisement