பட்டதை வென்றும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் முகென் எதில் நடித்துள்ளார் பாருங்க.

0
11739
mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.

-விளம்பரம்-

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பரம்பரை வீட்டை விற்க மனமில்லாததால் தானமாக வாழங்கிய எஸ் பி பி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் முகேன் பெரும்பாலும் சென்னையில் தான் இருந்து வந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அருண் எக்சல்லோ என்ற நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் முகென். மேலும், இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் மூவியின் பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

முகேஷ் பங்குபெற்ற அதே பிக்பாஸ் சீசனில் சக போட்டியாளர்களாக இருந்த தர்ஷன் லாஸ்லியா என்று பலரும் தற்போது சினிமா வாய்ப்புகளை பெற்று இருக்கிறார்கள். இதில் லாஸ்லியா இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் பட்டத்தை வென்ற முகெனுக்கு இன்னும் எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. மாறாக இப்படி விளம்பரப் படத்தில் பாடும் வாய்ப்பு தான் முகெனுக்கு கிடைத்திருக்கிறது. விரைவில் சினிமாவில் பாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Advertisement