பரம்பரை வீட்டை விற்க மனமில்லாததால் தானமாக வாழங்கிய எஸ் பி பி.

0
6386
s-p-b
- Advertisement -

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் எஸ் பிபாலசுப்ரமணியம். இவர் எம் ஜி ஆர், சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களின் படத்திற்கும் பாடலை பாடியவர். இவரை அனைவரும் எஸ்பிபி என்று தான் அழைப்பார்கள். இவர் 1966 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகின் மூலம் தான் முதன் முதலாக பாடத் தொடங்கினார். அதற்கு பிறகு பல மொழிகளில் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தினார். மேலும், இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர் சினிமா உலகில் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல ஆயிரத்துக்கும் மேல் பாடல்களை பாடியுள்ளார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் தன்னுடைய இசையை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தன்னுடைய இசை திறமைக்காக பல முறை தேசிய விருதுகளை பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலை பாடி உள்ளார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் 1946 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவருக்கு நெல்லூரில் சொந்த வீடு ஒன்றும் உள்ளது. இவர் சினிமா துறையில் பிரபலமான உடன் இவர் சென்னையிலேயே தங்கி விட்டார். நெல்லூரில் இருக்கும் அவருடைய சொந்த வீடு பூட்டியே கிடந்ததாக கூறப்படுகிறது. அது தனது பரம்பரை சொத்து என்பதால் எஸ்பி பாலாசுப்ரமணியம் அவர்கள் அதை விற்க மனமில்லாமல் தற்போது அதை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது நெல்லூரில் உள்ள தனது பூர்விக சொத்தை(வீட்டை) அவர் காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கி உள்ளார். அவர் தனது வீட்டை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், அந்த வீட்டில் காஞ்சி மடம் சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை மனமார பாராட்டி வருகின்றனர்.

Advertisement