துர்கா யாருனு உனக்கு சொல்லி இருக்கானா.! அபியிடம் சொன்ன வனிதா.! யார் அந்த துர்கா தெரியுமா.!

0
11595
abi-vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 வது நாளை கடந்துள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் வனிதா சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றிருந்தார். உள்ளே சென்றதிலிருந்தே போட்டியாளர்களை வறுத்தெடுத்து வரும் வனிதா இன்றய முதல் ப்ரோமோவில் அபிராமியிடம், முகென் உன்னிடம் துர்கா யார் என்பதை சொல்லி இருக்கானா என்று கூறியதை கேட்டு அபிராமி இல்லை, யார் அது என்று ஷாக்கானர்.

-விளம்பரம்-

ஆனால், யார் அந்த துர்கா? எதற்காக அவருக்கும் முகெனுக்கும் என்ன தொடர்பு ? எதற்காக அவரை பற்றி அபிராமியிடம் கூறினார் வனிதா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது. அந்த துர்கா வேறு யாரும் இல்லை, மலேசியாவில் இருக்கும் முகெனின் முறைப்பெண் தான் இந்த துர்கா. சமீபத்தில் இவர் முகென் குறித்து பேட்டி ஒன்றை கூட அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : பொய்யான காரணத்தை கூறி ஷெரினை நாமினேட் செய்த லாஸ்லியா.! ஆதாரம் இந்த குறும்படம் தான்.! 

- Advertisement -

அந்த பேட்டியில், முகென் காதலிப்பதாக கூறும் நதியா அவருடைய காதலி கிடையாது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் சொல்லப்போனால் நதியா, முகெனை சகோதரராக தான் பார்க்கிறார். ஆனால், முகென் ஏன் அவருடைய பெயரை சொன்னார் என்று தான் தெரியவில்லை என்று கூறியுள்ளார் துர்கா.

அதே போல முகென் மற்றும் தனக்கும் காதல் இல்லை என்று கூறியுள்ள துர்கா, நாங்கள் இருவரும் திருமணம் குறித்து மட்டும் முன்பு பேசி இருந்தோம். ஆனால், அவரோ நான் முதலில் வாழக்கையில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் அதன் பின்னர் தான் திருமணம் குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆனால், தற்போது அவரை திருமணம் செய்துகொள்ளும் எல்லாம் எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார் துர்கா.

-விளம்பரம்-

ஆனால், வனிதா எதற்காக துர்காவை பற்றி அபிராமியிடம் பேசினார் என்பது தான் புரியவில்லை. அதே போல சிறப்பு விருந்தினராக வனிதா உள்ளே சென்றதிலிருந்தே போட்டியாளர்களை உசுப்பேற்றும் வகையில் பேசி வருவதை பார்க்கும் போது பிக் பாஸே வனிதாவை உள்ளே அனுப்பி இப்படியெல்லாம் பேச வைக்க சொல்லி இருப்பாரோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

Advertisement