அபிராமி கொடுத்த காதல் பரிசை அபிராமியிடமே திருப்பி கொடுத்த முகென்.. வீடியோவை பாருங்க ?

0
9941
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரத்திற்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவேறியது. பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகென் தட்டிச் சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத ஒரு முகமாக தான் ஆரம்பத்தில் இருந்து வந்தார் முகென். மேலும் ஆரம்பத்தில் சில நாட்கள் வீட்டில் நடைபெற்ற எந்த நிகழ்விலும் பெரிதாக பங்கு பெறாமலும் இருந்துவந்தார். ஆனால், இவர் முதன் முதலில் ரசிகர்கள் மனதில் கொஞ்சம் பதிய ஆரம்பித்தது அபிராமி விஷயத்தில் தான்.

-விளம்பரம்-
Mugen

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பல்வேறு காதல்கதைகள் ஓடியது ஆனால் இந்த சீசனில் முதன்முதலில் ரொமான்ஸை செய்யத் தொடங்கியது அபிராமி தான். ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி, கவின் வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அவரை வெறுப்பேற்ற முகெனிடம் பழக ஆரம்பித்தார். ஆனால், அந்த பழக்கம் நாளடைவில் பின்னர் காதலாக மாறியது. இதனால் தனது காதலை முகெனிடம் வெளிப்படையாக கூறியிருந்தார் அபிராமி. ஆனால், மிகவும் தெளிவான மன நிலையில் இருந்த முகென், காதல் எல்லாம் வேண்டாம் நட்பு மட்டுமே போதும் என்று அபிராமியிடம் இருந்து கொஞ்சம் விலகி வந்தார். இதனால் முகென் மீது ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு வர துவங்கியது.

- Advertisement -

ஆனால் முகென் நட்பையும் தாண்டி அபிராமி மீது கொஞ்சம் ஓவராக அன்பை வைத்துவிட்டார் அந்த அன்பு ஒருகட்டத்தில் கட்டிலை உடைப்பது நாற்காலியைத் தூக்கி அடிக்க சென்றது என்ற அளவுக்கு மாறிவிட்டது. முகென் அபிராமியை காதலிக்கவில்லை என்றும் தனக்கு சந்தியா என்ற பெண் மீது விருப்பம் உள்ளதாகவும் அதனால் அவரிடம் தனது காதலை சொல்லப் போவதாகவும் கூறியிருந்தார். இதனால் மனமுடைந்த அபிராமி முகெனிடம் ஒரு கட்டத்தில் மிகவும் சண்டை போட்டு வந்தார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் சிறிது நாட்கள் பேசாமல் இருந்து வந்தார்கள். ஆனால், பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். இருப்பினும் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அவர் உடைத்து விட்டு சென்ற மெடலை ஒட்டவைத்து மிகவும் மனமுடைந்து போனார் முகென்.

இப்படி முகென் மற்றும் அபிராமியின் காதல் தெரிந்தும் தெரியாமலும் தான் இருந்து வந்தது. ஆனால், இவர்கள் இருவருமே ரகசிய பரிசுகளை ஒருவருக்கொருவர் வழங்கி வந்த வண்ணம் இருந்தார்கள். ஆரம்பத்தில் மோகனின் ஆடைகளை அணிந்த அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வரும்போது முகென் தனது பேன்ட் பகுதியில் இருந்து கிழித்து ஒரு ஆபரணம் போல அபிராமிக்கு பரிசளித்து இருந்த பொருளை தனதுசமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல அபிராமியும் தான் அணிந்திருந்த மோதிரத்தை முகெனுக்கு கொடுத்திருந்தார். அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அந்த மோதிரத்தை எப்போதும் அணிந்து கொண்டுதான் இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் கடந்த சில நாட்களாக முகேனின் கையில் அந்த மோதிரம் இல்லை மேலும் அதே மோதிரத்தை தற்போது அபிராமி மீண்டும் தனது கையில் அணிந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அபிராமி கொடுத்த அந்த மோதிரத்தை மீண்டும் அபிராமியிடமே கொடுத்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அபிராமி வெளியிட்ட வீடியோவில் அந்த மோதிரம் அபிராமி கையில் இருக்கிறது, இதன் மூலம் முகென் அந்த மோதிரத்தை அபிராமியிடம் திருப்பி கொடுத்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல முகென் காதலிப்பதாக சொன்ன நதியாவும் முகென் காதலை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. மேலும், நதியா வேறொரு நபரை காதலிப்பதாகவும் அந்த நபருடன் இருக்கும் சில புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement