மறைந்த தனது தந்தையின் பழைய வீடியோவை பகிர்ந்த முகென்.

0
2483
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற முகன் ராவின் தந்தை காலமாகியுள்ளதாக வெளியான செய்தி பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தைஏற்படுத்தி இருந்தது. . பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

-விளம்பரம்-
Mugen Rao shares throwback video of his father's singing in his Instagram story

- Advertisement -

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது .

இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர். இந்தநிலையில் முகென் ராவ்வின் தந்தையான பிரகாஷ் ராவ் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காலமாகி இருக்கிறார். பிரகாஷ் ராவ், மாரடைப்பு ஏற்பட்டு காலமாகிஇருந்தார் . அவருடைய வயது 52. முகென் ராவின் தந்தை காலமானதையொட்டி அவரது நண்பர்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் வருத்தத்தையும், ஆறுதலையும் கூறி வந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் முகென் தனது தந்தை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முகென் ராவின் தந்தை கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே என்ற பாடலை பாடியுள்ளார். அந்த விடியோவை பகிர்ந்துள்ள முகென், உங்களை மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முகென் பங்குபெற்ற அதே பிக்பாஸ் சீசனில் சக போட்டியாளர்களாக இருந்த தர்ஷன் லாஸ்லியா என்று பலரும் தற்போது சினிமா வாய்ப்புகளை பெற்று இருக்கிறார்கள். இதில் லாஸ்லியா இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் பட்டத்தை வென்ற முகெனுக்கு இன்னும் எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. மாறாக முகெனுக்கு விளம்பரப் படத்தில் பாடும் வாய்ப்பு தான் முகெனுக்கு கிடைத்தது. இறுதியாக அருண் எக்ஸ்சலோ விளம்பரத்தில் நடித்திருந்தார் முகென்.

Advertisement