இவர் தான் அமைதியாக டைட்டிலை அடிக்க போகிறார்.! அடித்து சொல்லும் பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.!

0
3889
bigg-boss

தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதிகட்டத்தில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 தமிழ். இந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போனவாரம் வனிதா விஜயகுமார் அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் ? வெளியே போகப்போறார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.மேலும்,இந்த வாரம் முழுவதும் நடக்கும் போட்டிகள் அனைத்திலும் யார்? வெற்றி பெற்று சிறந்த போட்டியாளராக விளங்குகிறாரோ ! அவருக்கு நேரடியாக கிராண்ட் பினாலேக்கு செல்லும் கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று பிக்பாஸ் குழு அறிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் நடந்த போட்டிகளில் 7 போட்டியாளர்களும் சூப்பராக விளையாடிக் கொண்டு வருகின்றனர். இந்த பினாலே டிக்கெட் பாஸ்கில் பங்குபெறும் போட்டியாளர்கள் சேரன், தர்ஷன்,கவின்,சாண்டி, ஷெரின் மற்றும் லாஸ்லியாகடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.மேலும், இந்த வாரம் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய திறமையைக் காட்டி வந்துள்ளனர்.ஆனால் வார இறுதியில்தான் தெரியும் யாருக்கு போகும் இந்த கோல்டன் டிக்கெட்.மேலும்,இதை மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னராக தர்ஷன் அல்லது கவின் ஆகிய இவர்களில் ஒருவர் இருப்பார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கவினுக்காக சாண்டியிடம் வக்காலத்து வாங்கும் லாஸ்லியா.! பிரிந்ததா பாய்ஸ் கேங்.!

- Advertisement -

இந்த வகையில் மக்கள் திலகம்,நடிப்பின் சிங்கம் சிவாஜிகணேசனின் பேரனும் ,ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1ல் ஓயல்காடு என்றி மூலம் உள்ளே வந்த நடிகை சுஜாதா வருணின் கணவனுமான நடிகர் சிவகுமார் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியது, இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆக முகின் தான் என்று கூறினார். மேலும் அவர் மனதார முகின் தான் வெற்றி பெறுவார் என்றும் வாழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல், முகின் ஒரு கருப்பு குதிரை என்றும் கூறினார். ஏனென்றால் இவர் அமைதியாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும், நாளுக்கு நாள் இவருடைய அழகும், திறமையும் பிக் பாஸ் விளையாட்டுக்கான நோக்கமும் புரிந்துகொண்டு விளையாடுகிறார் என்று கூறினார். மேலும், அவர் ஒவ்வொரு போட்டியையும் முழு மனதோடும், மகிழ்ச்சியாகவும் விளையாடிக் கொண்டு வருகின்றார் என்று கூறினார்.

ஆகவே நான் மன நிறைவுடன் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக முகென் தான் இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. மேலும், எனக்கு மலேசியா சிட்டி என்றால் ரொம்ப பிடிக்கும், ஐ லவ் மலேசியா என்றும்கூறியுள்ளார். மேலும் முகின் மலேசியாவை சேர்ந்தவர் என்பதால் அவர் என்னுடைய மலேசியாவின் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வந்தார். அதனுடன் மலேசியா குறித்த சந்தோஷமான விஷயங்களை பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கள் மூலம் மக்களிடையே நிறைய குழப்பங்களும்,பிக் பாஸ் சிசன் 3ல் திருப்பங்களும் ஏற்படுமா? என்று நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் இருப்பார் என்று இன்னும் இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement