ரித்விகா டாஸ்கை மும்தாஜ் செய்துகொண்டால் இப்படித்தான் இருப்பார்..! வெளியான புகைப்படம்.!

0
414
Mumtaj

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்று வருகிறது, அதில் போனில் அழைப்பு வரும் நபர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க அந்த போனில் யாரை குறிப்பிடுகின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து பிக் பாஸ் கூறும் டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.

mumtaz

இதில் சென்ராயன், ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் டாஸ்க்கை செய்து முடித்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில், ரித்விகா அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட வேண்டும் என்றால் மும்தாஜின் தலை முடியை எலக்ட்ரிக் கிறீன் அதாவது பளீர் பச்சை நிறத்தில் கலர் செய்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார், அதற்கு மும்தாஜ் என் அம்மாவிற்காக கூட அதை நான் செய்யமாட்டேன் மாட்டேன் என்று கூறிவிடுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோவை கண்டத்திலிருந்து மும்தாஜ் தனது பிடிவாதத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார் என்று சிலர் கூறிவந்தாலும், மும்தாஜிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் சற்று கடினமானது தான் என்று மும்தாஜின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களது வேலையை ஆரம்பித்து மும்தாஜ் ஒரு வேலை இந்த டாஸ்கை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

bigg boss mumtaz

அந்த புகைப்படத்தில் ஒருவேளை மும்தாஜ், ரித்விகாவிற்காக தனது தலை முடியை பச்சையாக கலரடித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று மும்தாஜின் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுக்ள்ளனர். தற்போது அந்த புகைப்படம் பலரையும் நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. நீங்களே அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.