பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே மும்தாஜை தான் போட்டியாளர்கள் அணைவரும் டார்கெட் செய்து வருகின்றனர். ஆனால், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை கண்ட போது கமலும் மும்தாஜை டார்கெட் செய்கிறாரா என்ற எண்ணம் அணைத்து ரசிகர்கள் மனதிலும் எழுந்தது. இதுகுறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும், நடிகையுமான ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது ‘மும்தாஜ் பிரார்த்தனை செய்றது ஐஸ்வர்யா மற்றும் மகத்துக்கு பயமா இருக்காம். பிரார்த்தனைக்கு எதுக்கு பயப்படணும்?? எது பயப்படும். ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா? போறேன்னு சொல்கிறவங்களை போக விடாமல் கதவை லாக் பண்ணது தப்பு. ஐஸ்வர்யா மற்றும் பாலாஜியை வெளியே அனுப்புங்க. கதவு திறந்ததை பார்த்ததும் பீதியாகிட்டாங்க” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் மும்தாஜை தான் டார்கெட் செய்தனர். இதுநாள் வரை மும்தாஜ் பின்னால் ‘மோமோ’ என்று சுற்றிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ் எதோ பெரிய தவறு செய்து விட்டது போல ஐஸ்வர்யா பைத்தியம் போல கத்திக் கொண்டிருந்தார். அதன் பின்னர் கமல் வேண்டுமென்றே மும்தாஜை,ஐஸ்வர்யா போல நீங்கள் நடந்து காட்டுங்கள் என்று கேட்டார். அதனால் ஐஸ்வர்யா போன்றே மும்தாஜ் செய்து காட்ட அதற்கு மஹத்’ இது தான் இவங்க, மிகப்பெரிய பூதம் இவங்க’ என்று கூறினார்.
#mumtaz pray pandrathu #aishu & #mahath Bayama irukkaam?prayerkku edhukku bayapadanum?? Edhu bayapadum?? ?? oru ladya whole house +host targets?!?!
Poren soldravangalai poga vidama door lock pannadhu thappu send out aish&balaji??door thorandhathu paarthavudan beedhiaitanga— Actress Harathi (@harathi_hahaha) August 18, 2018
ஐஸ்வர்யா செய்தது போலத்தான் மும்தாஜ் செய்தார், ஆனால் ஐஸ்வர்யா செய்த போது மட்டும் வாயை திறக்காத மஹத், மும்தாஜ் செய்த போது மட்டும் அவரை பேய் என்றும் சாத்தான் என்றும் கூறினார். அதற்கு உடனே கமலும் ‘பேய்கள நம்பாத,பிஞ்சிலே வேம்பதா’ என்று நான் ஒரு பாட்டே பாடி இருக்கனே’ என்று கூறினார். இது மும்தாஜை,மஹத் ‘பேய்’ என்று கூறியதால் தான் கமல், மும்தாஜை நம்ப வேண்டாம் என்று எடுத்து குடுத்தது போல தெரிந்தது.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது தான் மும்தாஜை வேண்டுமென்றே அனைவரும்(கமல் உட்பட) டார்கெட் செய்து வருகின்றனர் என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.ஆனால், மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது மும்தாஜ் அந்த அளவிற்கு ஒன்றும் தவறை செய்யவில்லை, புறம் பேசவும் இல்லை. ஆனால், மும்தாஜ் மற்ற போட்டியாளர்களை விட வலுவான போட்டியாளர் என்பதால் அவரையே அனைவரும் டார்கெட் செய்வது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.