மஹத் “Personal Life” பற்றி போட்டியாளர்கள் முன் அசிங்கப்படுத்திய மும்தாஜ்!

0
501

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க் பற்றி நிகழ்ச்சி காண்போருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கபட்டு, எந்த அணி பிக் பாஸ் கொடுக்கும் மூல பொருளை வைத்து அதிக பொம்மைகளை தயார் செய்து, எந்த அணி அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது தான் டாஸ்க்.

Bigg-Boss-mahat

- Advertisement -

இந்த டஸ்கில் மும்தாஜ் அணியில் இருக்கும் மஹத் எப்போதும் இல்லாத திருநாளை மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது அணியின் லக்ஸரி பட்ஜட்டை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் மட்டும் தான் அயராது படுபடுகிறேன் என்பது போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் மஹத்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது எதிரணியினர் மஹத் இருக்கும் ப்ளூ டீமின் பணத்தை கைப்பற்றிவிடலாம் என்று பண பெட்டியை திருட முயன்றனர். அப்போது மஹத் தனது அணியின் பணத்தை இழந்து விட கூடாது எனதற்காக அங்கும் இங்குமாய் ஓடிகொண்டே இருந்தார். அவர் ஓடியதில் அடிக்கடி மூச்சி வாங்கி விரைவில் சோர்வடைந்து விட்டார். சிறுது தூரம் ஓடுவதற்குள்ளாகவே ஏதோ மாரத்தான் ஓடியது போல மூச்சிரைத்தார் மஹத்.

-விளம்பரம்-

smoking-room

இந்த டாஸ்கின் இடையே ஜனனி, வைஷ்ணவி, மும்தாஜ் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில் ,மும்தாஜ் அவர்கள் ‘mahat need to smoke less’ அதாவது மஹத் கொஞ்சம் புகைபிடிப்பதை குறித்துக்கொள்ள வேண்டும் என்று ஜனனனி மற்றும் வைஷ்ணவியிடம் கூறியிருந்தார் .மஹத் புகைபிடிக்கிறார் என்பது போட்டியாளர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒரு விடயம் தான். அதே போல அவர் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிக்கிறார் என்பதற்கான ஆதாரமும் பல முறை நமது வலைதளத்தில் கூட வெளியிட்டிருந்தோம்.

ஆனால், எந்த போட்டியாளர்கள் புகைபிடிப்பதியும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக ஒளிபரப்பியது இல்லை. அதே போல போட்டியாளர்களும் புகைபிடிக்கும் நபர்களின் பெயரை நேரடியாக நிகழ்ச்சியில் கூறியது இல்லை. ஆனால், மஹத்தை , மும்தாஜ் இப்படி கூறியுள்ளது, மஹத் அதிகம் புகைப்பிடிப்பதால் தான் மஹதிற்கு ஓடும்போது அதிகம் மூச்சி வாங்குகிறது என்பாதை குறிப்பிட்டு அவரது புகைபிடிக்கும் பழக்கத்தை கிண்டல் செய்துள்ளார் மும்தாஜ்

Advertisement