தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் முத்துக்குமரன் கலந்து கொள்ள இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டவர் தான் முத்துக்குமரன். இவர் சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை சேர்ந்தவர்.
இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி 106 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது.
பிக் பாஸ் 8:
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முத்துக்குமரன் சிறப்பாக விளையாடி வந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் பேச்சால் போட்டியாளர்களையும் தன் பக்கம் கவர்ந்தார். இதனால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், ஆதரவும் பெருகியது. அது மட்டும் இல்லாமல் கொடுக்கப்பட்ட எல்லா டாஸ்க்கிலும் சிறப்பாக விளையாடி இருந்தார் முதுகுக்குமரன்.
முத்துக்குமரன் குறித்த தகவல்:
மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பணப்பெட்டி டாஸ்கில் முத்து குமரன் 50000 ரூபாய் வென்றதால் அவருக்கு மொத்தம் 41 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு நடதும் நிகழ்ச்சி:
இப்படி இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு முத்துக்குமரனுக்கு கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சி ஒன்று நடத்த இருக்கிறது. அதில் முத்துக்குமரன்
சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், மாநில அளவில் ஆன இரண்டாவது திருக்குறள் மாநாடு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
முத்துக்குமரன் கௌரவம்:
தமிழக முழுவதிலிருந்தும் தமிழ் மொழி இலக்கியத் திறன் அறிவு தேர்வில் வென்ற மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளயிருக்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு நானும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள். இதில் சிறப்பு பேச்சாளர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பலரும் முத்துக்குமரின் வளர்ச்சியை பாராட்டி வருகிறார்கள்.