என்னை மனவளர்ச்சி குன்றிய குழந்தைன்னு நெனச்சாங்க – பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துகுமரன் கடந்து வந்த பாதை

0
115
- Advertisement -

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தனது பள்ளிப்பருவம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கும் பழைய வீடியோ தான் தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலில் முத்துக்குமரன் உட்பட ‌ மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின், இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக மொத்தம் ஆறு பேர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு ட்விஸ்ட்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சுமார் 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் முத்துக்குமரன் தான் மக்களிடம் அதிக ஆதரவையும் வாக்குகளையும் பெற்று டைட்டிலை தட்டி தூக்கினார். தற்போது முத்துக்குமரன் தனது பள்ளிப் பருவம் குறித்து பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

முத்துக்குமரன் குறித்து:

அதில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று கிளம்பி வந்தேன். இங்கு ஒரு தனியார் யூடியூப் சேனலில் சோசியல் மீடியா எக்ஸிக்யூட்டிவ் வேலை இருப்பதாக கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். எக்ஸ் தளத்தில் தமிழில் டைப் செய்து பதிவிட வேண்டும் என்றார்கள். கொஞ்சம் எதுகை மோனையோடு பதிவுகளை வெளியிட்டேன். எனகனை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.

கதை சொல்ல ஆரம்பித்தேன்:

அதைத் தொடர்ந்து, என்னை வாய்ஸ் ஓவர் கொடுக்கச் சொன்னார்கள். நான் நன்றாக செய்தேன். பிறகு, கேமரா முன் நின்று பயப்படாமல் பேசுவாயா என்றார்கள். முயற்சி செய்கிறேன் என்று சொல்லி பேசினேன். அவர்கள், உன்னுடைய பேச்சு பிரமாதமாக இல்லை என்று சொல்ல, எனக்கு கதை சொல்லத் தெரியும். கதை சொல்லி பார்க்கிறேன் என்று சொன்னேன். பின்னர் என் கதைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

மூளை வளர்ச்சி இல்லைன்னு சொன்னாங்க:

மேலும், எங்கள் வீட்டில் நானும் என்னுடைய தங்கையும் இரட்டைக் குழந்தைகள். பொதுவாக கிராமங்களில் இரட்டைக் குழந்தைகள் என்றால், ஒரு குழந்தை உடல் உபாதையோடு பிறக்கும் என்று சொல்வார்கள். சிறுவயதில் நான் பெரிதாக எதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யமாட்டேன். அதனால் என்னை மன வளர்ச்சி குன்றிய குழந்தை என்று நினைத்து விட்டார்கள். ஆனால், என் தங்கை மிகவும் சுட்டியாக இருப்பாராம். என்னுடைய அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

தனுஷ் ஸ்டாலின் வாத்தியார்:

என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நிறைய சண்டை வரும். தன்னுடைய பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று என் அம்மா நினைத்தார். ஆனால் அப்பாவின் வற்புறுத்தலின் பெயரில் நாங்கள் தமிழ் கல்வியை பயின்றோம். தமிழ்வழிக் கல்வியில் தனுஷ் ஸ்டாலின் என்ற வாத்தியார் தான் நான் நன்றாக பேசுகிறேன் என்பதை கவனித்து என்னை பேச்சுப் போட்டிகளுக்கு தயார்படுத்தினார். அப்படிதான் சன் டிவியில் அரட்டை அரங்கத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது எங்கள் ஊரில் பெரும் பேச்சுப் பொருளாக மாறி, எனக்கு கட் அவுட் எல்லாம் வைத்தார்கள் என்று முத்துக்குமரன் கூறியிருக்கிறார்.

Advertisement