30,40 நாள்தான் இருப்பேன்னு நெனச்சேன்,ஆனா நீங்க தூக்கிவிட்டு பாராட்டினீங்க – பிக் பாஸுக்கு பின் மைனா வெளியிட்ட முதல் வீடியோ.

0
376
Myna
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றோடு நிறைவு பெற இருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

3 லட்சத்துடன் வெளியேறிய கதிர் :

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த பணப் பெட்டி டாஸ்க் விஜய் டிவி பிரபலன்களான மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் ஆகிய இவருக்காக தான் வைக்கப்ட்டது என்று ரசிகர்கள் பலர் விமசித்து வந்தனர்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுது:

ஆனால், மைனாவிற்கு முன்பாக 11,75,000 பணத்துடன் அமுதவாணன் வெளியேறிவிட்டார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் மைனா நந்தினியும் இந்த சீசனில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இவருக்கு கொஞ்சம் ஆதரவு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவர் மணிகண்டன் உடன் சேர்ந்து கொண்டு குருபீசம் செய்தது ரசிகர்களை வெறுப்பிற்கு உள்ளாகியது.

-விளம்பரம்-

மைனா வெளியேறிய காரணம் :

அதே போல இவர் காமெடி என்ற பெயரில் அடிக்கடி சில Cringeஆன செயல்களை செய்து வந்தது ரசிகர்களை காண்டாகியது. எனவே, இவரை வெளியேற்ற வேண்டும் என்று தான் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், இவர் எப்படியோ இறுதி வாரம் வரை பிக் பாஸில் நிலைத்துவிட்டார். இருப்பினும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மைனா வெளியிட்ட வீடியோ :

பிக் பாஸில் இருந்து வெளியேறிய மைனா முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு 30 50 நாட்கள் தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் ,நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு எல்லாம் பார்த்திருக்கிறேன். அதற்கு எல்லாம் மிகவும் நன்றி. என்னுடைய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்திருக்கிறது. எப்போதும் சோர்ந்து போகும் போதெல்லாம் நீங்கள் என்னை கை கொடுத்து நிப்பாட்டி வைத்து, என்னை திரையில் பார்த்து கைதட்டி இருக்கிறார்கள், அதற்கெல்லாம் உங்கள் அனைவருகும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

Advertisement