விக்ரமனை உருவாக்கேலி செய்த மகேஸ்வரி, ஏளனம் செய்து சிரித்த மைனா – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
447
vikraman
- Advertisement -

விக்ரமனை தாக்கி மகேஸ்வரி, மைனா கிண்டல், கேலி செய்ததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

தற்போது நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளராக கலந்து விக்ரமன் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

நிகழ்ச்சியில் விக்ரமன்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே எந்த ஒரு பிரச்சனை என்றாலும் விக்ரமன் குரல் கொடுத்து வந்திருக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகியது. அதிலும் அசீம் – விக்ரமன் இடையே இருந்த சர்ச்சை பயங்கரமாக இருந்தது. கடந்த வாரம் சிவினை இமிடெட் செய்து அசீம் நடித்துக் காட்டியிருந்ததற்கு விக்ரமன் குரல் கொடுத்து பேசியிருந்தார். பிக் பாஸும் அசிமை கண்டித்து இருந்தார்.

-விளம்பரம்-

விக்ரமன் மீது கோபப்பட்ட மைனா:

இந்த நிலையில் விக்ரமனை கிண்டல் செய்யும் விதமாக மகேஸ்வரி, மைனா செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, இந்த வாரம் இந்த டிவி- அந்த டிவி என டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள். அப்போது மைனா குழந்தையை வைத்து ஒரு டிராமா செய்திருந்தார். உண்மையிலேயே அது கேவலமாக இருந்தது.

மகேஸ்வரி- விக்ரமன் சண்டை:

பின் எந்த அணி வெற்றி பெற்றது என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு விக்ரமன் மைனா நடத்திய நிகழ்ச்சி சரி இல்லை என்று கூறி இருந்தார். இதனால் கடுப்பாகி மைனா விக்ரமின் மீது கோபப்பட்டார். இதற்கு மகேஸ்வரியும் அவருக்கு ஆறுதலாக பேசியிருந்தார்.இதனை அடுத்து மகேஸ்வரிக்கும், விக்ரமனிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மகேஸ்வரி விக்ரமனை போல் இமிடெட் செய்து காண்பித்து இருந்தார்.இதை பார்த்த மைனா பயங்கரமாக கேலி செய்து சிரித்தார்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

பின் விக்ரமன், அடுத்தவங்களை இமிடெட் செய்ததற்கு தான் அசிமை கண்டித்து இருந்தார்கள் என்று சொன்னவுடனே நான் யாரையும் இமிடெட் செய்யவில்லை. எல்லோருக்கும் ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று மகேஸ்வரி வாக்குவாதம் செய்கிறார். இப்படி நந்தினியும், மகேஸ்வரியும் கூட்டணி சேர்ந்து விக்ரமனை தாக்கி பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே விக்ரமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நந்தினி- மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement